முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 197 கனடாவில் மனைவியை கொன்ற இலங்கை தமிழர்

கனடாவில் மனைவியை கொன்ற இலங்கை தமிழர் - விசாரணையில் வெளியான பகீர் தகவல்
கனடாவிற்கு புலம்பெயரும் நோக்குடனேயே தன்னை தர்ஷிகா திருமணம் செய்ததாக தனது மனைவியான தர்ஷிகாவை கொலை செய்த இலங்கைத் தமிழரான தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார். கனடாவில் 2019ல், பிரிந்த தனது மனைவியை வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வழக்கு விசாரணை ஆரம்பம் கனடாவில் மனைவியை கொன்ற இலங்கை தமிழர் - விசாரணையில் வெளியான பகீர் தகவல் | Sri Lankan Tamil Who Killed His Wife In Canada இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பமானது. நேற்றைய விசாரணையின் போது காவல்துறையினர் தனபாலசிங்கத்திடம் நடத்திய விசாரணை தொடர்பான காணொளி நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த தன் மனைவி தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அதில் விசாரணை அதிகாரி கெரி பெர்ணாண்டஸிடம் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூலம் தனபாலசிங்கம் பேசினார். அப்போது நீங்கள் என்னை ஒரு சம்பவத்தில் குற்றம் சாட்டுகிறீர்கள். நான் எதுவும் செய்யவில்லை. சிறு பறவையைக் கூட கொல்வது எனக்கு பிடிக்காது கனடாவில் மனைவியை கொன்ற இலங்கை தமிழர் - விசாரணையில் வெளியான பகீர் தகவல் | Sri Lankan Tamil Who Killed His Wife In Canada ஒரு சிறு பறவையைக் கூட கொல்வது எனக்கு பிடிக்காது, எனது மனைவி என்னை விட்டுப் பிரிந்ததிலிருந்து மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கனடாவுக்கு புலம்பெயர்வதற்காக மட்டுமே என்னை தர்ஷிகா திருமணம் செய்ய நினைத்தார். ஏற்கனவே முன்னர் என்னை அவர் தாக்கிவிட்டு நான் அவரை அடித்ததாக பொய் புகார் அளித்தார் போன்ற விடயங்களையெல்லாம் பேசியிருந்தார். தனபாலசிங்கம் குடும்ப நண்பரான சோமகல சோமகாசனின் சாட்சியமும் அரச சட்டத்தரணி அன்ட்ரூ பில்லாவினால் வாசிக்கப்பட்டது. ஆரம்ப விசாரணையில் சோமகாசன் சாட்சியம் அளித்தார், ஆனால் சிறிது காலத்திற்கு பின் அவர் உயிரிழந்துவிட்டார். சோமகாசன் அதில் கூறுகையில், தர்ஷிகா திருமண பந்தத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் தனபாலசிங்கத்தை சந்தித்து மத்தியஸ்தம் செய்ய தான் அழைக்கப்பட்டதாக கூறினார்.
அப்போது கோபப்பட்ட தனபாலசிங்கம், நான் அவளை அப்படியே விட விரும்பவில்லை என்று கூறினார். மேலும், நான் தர்ஷிகாவை கொல்லப் போகிறேன். அவள் எனக்காக இல்லை என்றால், யாருக்காகவும் இருக்கக்கூடாது என தெரிவித்தாக கூறியிருந்தார். தர்ஷிகாவை கொன்றது தனபாலசிங்கம் தான் கனடாவில் மனைவியை கொன்ற இலங்கை தமிழர் - விசாரணையில் வெளியான பகீர் தகவல் | Sri Lankan Tamil Who Killed His Wife In Canada செப்டம்பர் 11, 2019 அன்று மாலை 6:15 மணியளவில் நடந்த கத்திக் குத்துத் தாக்குதல் கண்காணிப்பு கமராவில் பதிவானது, அந்த வீடியோவில் தர்ஷிகாவை கொன்றது தனபாலசிங்கம் தான் என்று நீதிமன்றம் மற்றும் அரசு தரப்பினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதே சமயம் கொலை செய்யும் நோக்கம் அவருக்கு இருந்ததா என்பதை நீதிபதி தீர்மானிக்க வேண்டும் என கூறப்பட்டது. காணொளி காட்டப்பட்ட பின்னர், தனபாலசிங்கம் தவறு செய்தாரா மற்றும் அவர் குற்றவாளியா என்பது குறித்து தடயவியல் மனநல மருத்துவரின் மதிப்பீட்டிற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் டாம் பிட்மேன் நீதிபதியிடம் கூறினார். இந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு தொடர்ந்து நடக்கவுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?