முகமூடி அணிந்து மாணவர்களை கடத்தும் மர்மக் கும்பல்..! வசமாக மாட்டிய ஒருவர்
அம்பாறை - சாய்ந்தமருது காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சாய்ந்தமருது காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பிரபல பாடசாலை மாணவர்களான 11 வயது மதிக்கத்தக்க இருவரை இருவேறு சந்தரப்பங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடத்த முயற்சிப்பதாக காவல் நிலையத்தில் இம்மாதம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
அதிரடி நடவடிக்கை
முகமூடி அணிந்து மாணவர்களை கடத்தும் மர்மக் கும்பல்..! வசமாக மாட்டிய ஒருவர் | Masked Assailants Attempt Abduct Students Amparai
இதனையடுத்து சாய்ந்தமருது காவல் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம காவல்துறை பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான காவல்துறை குழுவினர் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையின் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கமராக்களின் உதவிகள் மற்றும் புலன் விசாரணை முடக்கி விடப்பட்ட நிலையில், மாணவர்களை கடத்த முயற்சித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றுடன் முகங்களை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் மாணவர்கள் சிலரை இலக்கு வைத்து இவ்வாறான கடத்தல் முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவித்து கடந்த வாரம் பல முறைப்பாடுகள் பதிவுசெய்யட்டிருந்ததுடன், சாய்ந்தமருது காவல்துறையினரும் விசாரணையினை முடக்கி விட்டிருந்தனர்.
அடையாள அணிவகுப்பு
முகமூடி அணிந்து மாணவர்களை கடத்தும் மர்மக் கும்பல்..! வசமாக மாட்டிய ஒருவர் | Masked Assailants Attempt Abduct Students Amparai
இதற்கமைய காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதுடன் இன்று (29) செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வடையாள அணிவகுப்பின் போது அச்சந்தேக நபரை பாதிக்கப்பட்ட மாணவன் அடையாளப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்