முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

187 மனிதர்கள் தான் மனிதர்களிற்கு ஆவத்து,

உங்கள் காதலர் நல்லவரா, கெட்டவரா என எப்படி அறிவது? கட்டுரை தகவல்
எழுதியவர்,துஷார் குல்கர்னி மகாராஷ்டிராவை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக்கி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளார், ஷ்ரத்தாவின் லிவ்-இன் பார்ட்னர் அஃப்தாப். (திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்துவந்தவர்). இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல கேள்விகள் எழுகின்றன. அந்த உறவில் ஷ்ரத்தாவுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவரின் காதலர் ஷ்ரத்தாவை உடல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால், அந்த உறவில் இருந்து அவர் ஏன் வெளியேறவில்லை? அதை அவர் உணரவில்லையா என்பன உள்ளிட்ட கேள்விகளை பலரும் எழுப்புகின்றனர். சில சமயங்களில் இருவருக்கும் இடையேயான உறவு முறியும் நிலையில் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். அஃப்தாப் உடன் தான் பாதுகாப்பாக உணரவில்லை என தன் நண்பர்களிடம் கூறியுள்ளார் ஷ்ரத்தா. ஆனாலும், ஷ்ரத்தா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பலரின் மனதை தொந்தரவு செய்கிறது. ‘டாக்சிக் ரிலேஷன்ஷிப்’ எனப்படும் மனவலியை ஏற்படுத்தக்கூடிய உறவில் இருந்தும் ஏன் அதிலிருந்து ஷ்ரத்தா வெளியேறவில்லை? மனவலியை ஏற்படுத்தக்கூடிய உறவு என்றால் என்ன? அதனை எப்படி அறிந்துகொள்வது? அதிலிருந்து பாதுகாப்பாக எப்படி வெளியேறுவது? என்பதை இக்கட்டுரையில் அலசியுள்ளோம். ஏன் மனிதர்களால் முன்னாள் காதலை மறக்க முடிவதில்லை? பிரிந்து பிரிந்து சேருவதற்கு பின்னிருக்கும் உளவியல் என்ன? 24 ஜூலை 2022 காதல் வந்தால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? இச்சை வந்தால் நடப்பவை என்ன? 4 ஜூன் 2022 நீண்ட கால உறவை இளைய தலைமுறையினர் விரும்பாதது ஏன்? 4 செப்டெம்பர் 2022 ‘டாக்சிக் ரிலேஷன்ஷிப்’ என்றால் என்ன? “எங்கு இருக்கிறாய்? ஆன்லைனில் இருந்தும் ஏன் என் மெசேஜுக்கு நீண்ட நேரமாக பதில் அனுப்பவில்லை? உன்னுடைய ஜிபிஎஸ் இருப்பிடத்தை அனுப்பு, வீடியோ கால் செய்து நீ எங்கு இருக்கிறாய்? என காட்டு”. இந்த கேள்விகள் எதனை உணர்த்துகின்றன? உங்கள் காதலியோ அல்லது காதலனோ உங்களை அதிகம் காதலிப்பதை உணர்த்துகிறது என பலரும் இவற்றை நியாயப்படுத்தலாம். ஆனால், இந்த கேள்விகளை எழுப்பும் நபர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறாரா, உங்களை கட்டுப்படுத்த நினைக்கிறாரா என்பதை கண்டறிவது மிகவும் முக்கியம். மேலும் இது எப்போதாவது நடக்கிறதா அல்லது அடிக்கடி தொடர்கிறதா என்பதை பார்ப்பதும் அவசியம். ஒருவரை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்பது, எதிர்மறையாக அவர் மீது தாக்கம் செலுத்துவது ஆகியவை ‘டாக்சிக் ரிலேஷன்ஷிப்’ என, ஆக்ஸ்ஃபோர்டு அகராதி வரையறுக்கிறது. காதல் பட மூலாதாரம்,GETTY IMAGES ‘டாக்சிக்’ உறவில் இருக்கிறோம் என்பதை எப்படி கண்டறிவது? இங்கிலாந்தில் உள்ள பெண்கள் ஒத்துழைப்பு ஆணையத்தின் இணை தலைவர் ஆடினா கிளேர் இத்தகைய உறவை கண்டுபிடிப்பது குறித்த சில நடத்தைகளை விளக்குகிறார். மன ரீதியாக ஒருவரை துன்புறுத்துவதும் குடும்ப வன்முறையே என்கிறார் அவர். எனவே அத்தகைய உறவிலிருந்து உடனடியாக வெளியேறுவது அவசியமானது. அத்தகைய நபரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை
என்று உணர்வது முக்கியம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி