முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 159 சி.வி விக்னேஸ்வரன் வெளியிட்ட தகவல்:

சி.வி விக்னேஸ்வரன் வெளியிட்ட தகவல்: மகிழ்ச்சியில் தமிழ் மக்கள்
நாட்டில் "எங்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தாலேயே தமிழர்களின் அரசியல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளது. கூடிய விரைவிலே தற்போதைய நிலையைப் பார்த்து - தற்போதைய சூழலைப் பார்த்து - பின்புலத்தைப் பார்த்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையடைய வேண்டிய சூழ்நிலை வரும்." என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார். சி.வி விக்னேஸ்வரன் வெளியிட்ட தகவல்: மகிழ்ச்சியில் தமிழ் மக்கள் | Sri Lanka Tamil Political Parties Together ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "தமிழர்களின் அரசியல் நிலை பின்னோக்கிச் செல்லும் விதத்தில்தான் உள்ளது. எங்களுக்குள் ஒற்றுமை மிகவும் அவசியம். ஆனால், அதற்கு நாங்கள் எப்போதும் இடம் கொடுப்பதில்லை. எங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளையும், வேற்றுமைகளையும் கூறிக்கொண்டு எங்களுக்குள்ளேயே பிரச்சினைப்பட்டுக் கொண்டிருக்கின்றோமே தவிர மக்களுக்கு என்னென்ன தேவை என்பது தொடர்பில் நாங்கள் நினைப்பதில்லை. இப்போது நாங்கள் அரசியல் பேசத் தொடங்கி வெறும் பேச்சாகவே எங்களுடைய அரசியல் போய்க்கொண்டிருக்கின்றது. சி.வி விக்னேஸ்வரன் வெளியிட்ட தகவல்: மகிழ்ச்சியில் தமிழ் மக்கள் | Sri Lanka Tamil Political Parties Together நான் சுமந்திரன் எம்.பிக்குப் பாராட்டுத் தெவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் (Nimal Siripala De silva) கருத்துக்குச் சுமந்திரன் எம்.பி. (M.A Sumanthiran) வழங்கிய பதிலுக்காக அவரைப் பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். 'வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைவர்கள் தங்களுக்குள் கட்சிகள், அணிகளாகப் பிரிந்து நின்றாலும், தேசிய இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே ஒரே வழி என்பதில் மிக உறுதியாகவும், ஒருமித்த நிலைப்பாட்டிலும் உள்ளனர். சி.வி விக்னேஸ்வரன் வெளியிட்ட தகவல்: மகிழ்ச்சியில் தமிழ் மக்கள் | Sri Lanka Tamil Political Parties Together எனவே, தமிழ்த் தலைவர்கள் பிளவுபட்டிருக்கின்றார்கள் என்று சாக்குப்போக்குக் கூறி, சமாளிப்பதை விடுத்து, சமஷ்டித் தீர்வுக்கு வழி பாருங்கள்' என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு நல்ல பதிலை சுமந்திரன் எம்.பி வழங்கியுள்ளார். நான் சுமந்திரன் எம்.பிக்குப் பாராட்டுத் தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு அவர் உடனே நன்றி தெரிவித்து எனக்குப் பதில் அனுப்பியுள்ளார். எங்களுக்குள் இருப்பவர்கள் என்ன நன்மையைச் செய்தாலும் நாங்கள் அதைப் பாராட்டுபவர்களாவே இருக்க வேண்டும். சி.வி விக்னேஸ்வரன் வெளியிட்ட தகவல்: மகிழ்ச்சியில் தமிழ் மக்கள் | Sri Lanka Tamil Political Parties Together எந்த நேரமும் எங்களுடைய மக்கள் மத்தியில் அவர் முன்னுக்குச் செல்லக்கூடாது என்ற எண்ணத்தில் நாங்கள் வளர்ந்தோமானால் எந்தக் காலத்திலும் தமிழர்களுக்கான விடிவை நோக்கிச் செல்ல முடியாது. ஆகவே எங்களுக்குள் ஒற்றுமை மிகவும் அவசியம். அந்த ஒற்றுமை இல்லாத காரணத்தாலேயே தமிழர்களின் அரசியல் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளது. வெகுவிரைவிலே தற்போதைய நிலையைப் பார்த்து - தற்போதைய சூழலைப் பார்த்து - பின்புலத்தைப் பார்த்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையடைய வேண்டிய கட்டம் வரும் என்பது என்னுடைய கருத்து" - என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி