வியட்நாம் துறைமுகத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!
வியட்நாம் வோங் டோ துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு தலைமையில் இலங்கை கடற்படை, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியாட்நாமில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் சிங்கப்பூரை தளமாக கொண்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் என்பன ஒன்றிணைந்து கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்தன.
வியட்நாம் துறைமுகத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு! | The Ministry Sri Lankans Staying Port Vietnam
பயணிகளை பரிசோதிக்கும் செயற்பாடுகளை வியட்நாம் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து குடியேரிகளுக்கான சர்வதேச அமைப்பொன்று முன்னெடுப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்துவதற்கான விசாரணை செயற்பாடுகள் நிறைவடைந்ததும் அவர்களை உடனடியாக மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்