முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 182 நவம்பர் மாதம் வெளிவந்தும் வெளிவர துடிக்கும். பல செய்துதிகள்,

“கார்த்திகை வாசம்” மலர்க் கண்காட்சி இன்று ஆரம்பம்
வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாக 2014ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகையில் மரநடுகை மாதத்தைச் சிறப்பாக கொண்டாடி வருவதோடு, மலர்க்கண்காட்சி ஒன்றையும் நடாத்தி வருகின்றது. இவ்வருடமும் மரநடுகை மாதத்தைக் கொண்டாடும் வகையில் இன்று 18ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள மலர்முற்றம் காட்சித்திடலில் பிற்பகல் 3.00 மணிக்கு கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி திறந்து வைக்கப்படவுள்ளது. ஆர்வலர்களுக்கு அழைப்பு “கார்த்திகை வாசம்” மலர்க் கண்காட்சி இன்று ஆரம்பம் | Karthikai Vasam Flower Show Starts Today Jaffna தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா. சண்முகலிங்கன் அவர்கள் கலந்துகொள்கிறார் . சிறப்பு விருந்தினர்களாகச் சமூகச் செயற்பாட்டாளர் திரு. ம. செல்வின் இரேனியஸ் அவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. ச. ரவி அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். “இம்மலர்க்கண்காட்சியின் தொடக்க விழாவில் தங்களின் பங்கேற்பு இன்றியமையாததாக எங்களால் உணரப்படுகிறது. தங்களின் வருகை விழாவைச் சிறப்புடையதாக்கும் என்பதால் இவ்விழாவில் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி 27.11.2022 வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணிவரை நடைபெறவுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?