கன்பராவில் தமிழ்ச்சிறுவனைக் காணவில்லை! தாயும் சகோதரனும் குளத்திலிருந்து சடலமாக மீட்பு!!
கன்பரா Gungahlin-இலுள்ள Yerrabi குளத்தில் தாய் மற்றும் மகன் ஒருவரது சடலங்கள் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சிறுவனைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இச்சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மற்றொரு மகன் என நம்பப்படுகிறது.
காணாமல்போன 8 வயதுச் சிறுவனின் பெயர் பிரணவ் விவேகானந்தன் எனவும், இவர் Yerrabi குளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து காணாமல்போயுள்ளதாகவும், இவரை யாரேனும் பார்த்திருந்தால் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
Advertisement
இச்சிறுவன் orange நிற T-Shirt மற்றும் இள நிறத்தில் காற்சட்டை அணிந்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை Yerrabi குளத்திலிருந்து மீட்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகன் ஆகியோரின் மரணம் தொடர்பில் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தகவல்கள் பெறப்படுவதாகவும், இம்மரணங்களின் பின்னணி இன்னும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்ட Yerrabi குளம் அமைந்திருப்பது கன்பரா வடக்கிலுள்ள பிரபல சுற்றுலாத்தளமென்பது குறிப்பிடத்தக்கது.
இச்சிறுவன் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 131 444 என்ற எண்ணில் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு ACT பொலிஸார் அறிவித்துள்ளனர்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்