முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 166 ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம்

ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தண்டனை அனுபவித்து வந்த தாம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்து முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் தாம் இலங்கைக்கு செல்ல தமிழக அரசு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என சாந்தன் கோரியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 6 பேர் நேற்று இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைக்காக போராட்டம் ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து! | India Rajiv Gandhi Murder Suspects
Murugan Court இந்த நிலையில் வேலூர் சிறைச்சாலையிலுள்ள முருகன் மற்றும் சாந்தனை சட்டத்தரணி ராஜகுரு நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது தமது விடுதலைக்காக போராடிய சட்டத்தரணிகள், தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்ராலின், மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றிற்கு அவர்கள் நன்றியை தெரிவித்ததாக சட்டத்தரணி ராஜகுரு தெரிவித்துள்ளார். அத்துடன் முருகன் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மனைவி நளினியுடன் இணைந்து வாழவுள்ளதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து தமிழகத்தில் தங்கியிருப்பதா? அல்லது லண்டன் செல்வதா என்பது குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் முருகன் தெரிவித்ததாக சட்டத்தரணி ராஜகுரு தெரிவித்துள்ளார். ஆலய வழிபாடு ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து! | India Rajiv Gandhi Murder Suspects Murugan Court இந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபடவுள்ளதாகவும் சாந்தன் தெரிவித்தார். மேலும் தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல உள்ளதாகவும் கடவுச் சீட்டு காலாவதியாகியுள்ளமையினால் அதனை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாந்தன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் 6 பேரில் ஒருவரான ரவிச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தாயார் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். நளினி சிறையில் ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து! | India Rajiv Gandhi Murder Suspects Murugan Court இதேவேளை, நளினியின் விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்காமையினால் இன்று சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்பு இல்லை என வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இதனால், அவர் எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி