ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகமாக பரவும் நோய்!
குரங்கம்மை நோய் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களில் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதின் ஊடாக குரங்கம்மை பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகமாக பரவும் நோய்! | The Most Common Disease Among Homosexuals
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களில் 99 சதவீதமானவர்களில் ஆண்கள் எனவும் அவர்களில் 95 சதவீதமானோர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இதேவேளை குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்