யாழில் பாரிய சோகம்... சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை!
யாழ். குருநகரில் நேற்றைய தினம் (16) இரவு கடற்றொழில் மேற்கொள்ள சென்றவர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் குருநகரைச் சேர்ந்த 40 வயதுடைய அலோசியஸ் ஜான்சன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
யாழில் பாரிய சோகம்... சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை! | Person Drowned In Jaffna Rescued As A Dead Body
மீன் பிடிப்பதற்காக கடலில் இறங்கிய குறித்த நபர் வலை வீசி மீன்பிடித்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவரைக் காணவில்லை என்று தேடிப்பார்த்தபொழுது நீருள் மூழ்கி சடலமாக காணப்பட்டுள்ளார்.
யாழில் பாரிய சோகம்... சடலமாக மீட்கப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை! | Person Drowned In Jaffna Rescued As A Dead Body
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்