முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 177 காலநிலை மாற்றத்தால் ஆண் உயிர் இனம் இல்லாமல் போகலாம்,

காலநிலை மாற்றத்தால் பெண்ணாக மாறும் ஆண் உயிரினங்கள் - ஆபத்தான நிலத்தின் அடியில் உள்ள வாயுக்கள் வெடிப்பதால் உண்டாகும் குழிகள்
காலநிலை மாற்றத்தின் பல தாக்கங்கள் மனிதர்களால் தாங்க முடியாத அளவில் உள்ளன. அதில் சில மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாததாகவும் உள்ளன. சைபீரியாவில் ‘பெர்மஃப்ரோஸ்ட்’ எனப்படும் பனிப்படலத்தால் மூடப்பட்ட மண் படுகைகள் உள்ளன. இது இரண்டு வருடங்களுக்கும் மேலாக உறைந்து போன நிலமாக கருதப்படுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள பள்ளங்களுக்கு புவி வெப்பமயமாதலை காரணமாக கூறுகின்றனர் ரஷ்ய விஞ்ஞானிகள். வெப்பநிலை பூமிக்கடியில் இருக்கும் வாயுக்களை வெடிக்க வைத்து, பள்ளங்கள் உருவாகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் ஆர்டிக் பகுதி நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை உயிரிகள் - உலகுக்கு அச்சுறுத்தலா? அனுகூலமா? 1 அக்டோபர் 2022 மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருக கால நிலைமாற்றம் காரணமா? 12 நவம்பர் 2022 காலநிலை மாற்றம் நமக்கு நன்மை பயக்கும் விஷயமா? - உண்மை என்ன? 10 நவம்பர் 2022 பூமியிலிருந்து நிலவின் இருளான பகுதிக்கு இரவில் பிரதிபலிக்கப்படும் சூரிய ஒளியை அளந்து அதனை ‘எர்த் ஷைன்’ அல்லது 'அல்பெடோ' (albedo) என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். கிழக்கு பசிஃபிக் பெருங்கடலில் உள்ள தாழ் மேகங்களின் எண்ணிக்கை பெருங்கடல் வெப்பமயமாதலால் குறைந்து கொண்டு வருகிறது. இந்த மேகங்கள் ஒரு கண்ணாடியை போல செயல்பட்டு, சூரிய ஒளியை பிரதிபலிக்கும். எனவே அந்த மேகங்கள் இல்லாமல் போனால் வெளிச்சம் குறைந்துவிடும். எனவே வெப்பமயமாதல் பூமியை இருளாக்கி வருகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஊர்வனவற்றின் பாலின மாற்றம் புவி வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. சில உயிரினங்கள் ஆச்சர்யமிக்க வகையில் புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படுகின்றன. சில ஊர்வன உயிரினங்களில் அதன் முட்டை அடைகாக்கப்படும் சமயத்தில் உள்ள வெப்பம்தான் பகுதியளவில் அதன் பாலினத்தை முடிவு செய்யும். ஆஸ்திரேலியாவில் காணப்படும் சென்ட்ரல் பியர்டட் ட்ரேகன்ஸ் (central bearded dragons) எனும் ஒரு வகை பல்லிகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அடைக்காக்கப்பட்டால் முட்டைக்குள் இருக்கும் குஞ்சுகள் மரபணு ரீதியாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக மாறிவிடும். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண் எல்லாம் பெண்ணாக மாறிவிட்டால் அந்த இனமே அழிந்துவிடும். அதேபோல பெருங்கடலில் பசுமைக் குடில் வாயுவான கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்தால், மீன்கள் தனது வாசனை சக்தியை இழந்துவிடும். அதேபோல ஒரு முழுமையான உணவு சங்கிலித் தொடர் வெப்பமயமாதலால் மாறியுள்ளது. படக்குறிப்பு, கிரேட் டிட் பறவைக் குஞ்சுகள் மிளகாய் சாஸுக்கு வந்த தட்டுப்பாடு அதீத வெப்பநிலை உணவுப் பொருட்கள் வளர்வதையும் கடினமாக்குகிறது. கோதுமை, மக்காச் சோளம் மற்றும் காஃபி பயிர்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் சில பயிர்களின் உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள ஹை ஃபாங் புட்ஸ் என்னும் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் பாட்டில் பச்சை மிளகாய் சாஸை தயாரித்து வந்தது. ஆனால் தற்போது அந்த நிறுவனம் பச்சை மிளகாய் உற்பத்தி குறைந்து வருவதால் தனது வாடிக்கையாளர்கள் சாஸை குறைவாக பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. டிஜான் வகை கடுகுகள் கோடைக் காலத்தில் ஃபிரான்ஸில் உள்ள சூப்பர் மார்கெட்டுகள் 'டிஜான்' வகை கடுகுகள் தங்களிடம் இல்லை என தெரிவித்தது. இந்த வகை கடுகு கனடாவில்தான் அதிகம் விளைகிறது. ஆனால் பருவநிலை மாற்றம் அதன் உற்பத்தியை வெகுவாக குறைத்துள்ளது. அதேபோல பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கார்பன் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஃபிரான்ஸில் போதுமான குளிர்ந்த நீர் இல்லை என்ற காரணத்தால் இடிஎஃப் என்ற ஆற்றல் நிறுவனம் ஃபிரான்ஸில் உள்ள அணு ஆலைகளில் உற்பத்தியை குறைத்தது. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா பருவநிலை கூட்டத்தில் 200 நாடுகள் இணைந்து கார்பன் பயன்பாட்டை குறைப்பதாக ஒப்புக் கொண்டன. புவி வெப்பமயமாதல் பல பிரச்னைகளை நாளுக்கு நாள் ஏற்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் மேலும் பல ஆச்சரியமான தாக்கங்களை நாம் எதிர்கொள்ளவும் தயாராகவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி