மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை!
மட்டக்களப்பு மாவட்டம் - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் அல் மஜ்மா நகர் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான சீனிமுகம்மது முகம்மது காசிம் வயது (74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை! | Wild Elephant Killed An Elderly Man In Batticaloa
இச் சம்பவத்தில் தொடர்பில் மேலும் தெரியவருவது,
நேற்று வியாழக்கிழமை (25-11-2022) இரவு மேற்படி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையினை கிராமத்தவர்கள் சத்தமிட்டு துரத்தியுள்ளனர்.
குறித்த யானையானது கிராமத்தினை விட்டு சென்று விட்டதாக எண்ணி வீட்டின் வளவினுள் இருந்தபோது திடிரென அங்குவந்த யானை முதியவரை தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை! | Wild Elephant Killed An Elderly Man In Batticaloa
மனைவி அன்றைய தினம் ஓட்டமாவடிக்கு உறவினர்களை சென்றதனால் தனிமையிலேயே இவர் இருந்துள்ளார்.
மறு நாள் காலையிலே இவரது நடமாட்டம் காணப்படாத நிலை கண்டு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் உயிரை பறித்த காட்டு யானை! | Wild Elephant Killed An Elderly Man In Batticaloa
இதேவேளை வாழைச்சேனை கடதாசி ஆலையை அண்மித்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதாகவும் இரவு வேளைகளில் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதுடன் சேதங்களையும் ஏற்படுத்தி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன் குறித்த காட்டு பகுதியினை அகற்றி தருமாறும் கேட்கின்றனர்.
யானைகளின் அட்டகாசம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் பல முறை தெரிவித்தும் கவனிக்காமல் உள்ளதாக பிரதேச வாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்