முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b596

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் பலி அவுஸ்திரேலியா - மெல்பன் தென் மேற்கிலுள்ள Werribee பகுதியில், வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி நான்கு பிள்ளைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். Mantello Drive-இலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயணைப்புப்படையினர் அங்கு வந்தபோது பெரியளவில் தீ பரவிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வீட்டின் மேற்கூரை முழுவதுமாக உடைந்துவிட்டதாகவும், தீயை கட்டுப்படுத்த 40 தீயணைப்பு வீரர்கள் போராட வேண்டியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இச்சம்பவத்தில் 10 வயது மற்றும் 3 வயதுடைய இரு ஆண் பிள்ளைகளும், 6 வயது மற்றும் 1 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தீயிலிருந்து தப்பித்த பெற்றோரும், 8 வயதுச் சிறுவனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பிலும், இச்சம்பவம் சந்தேகத்திற்கிடமானதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news b595

கனடாவில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்று உலகளாவிய ரீதியில் தமிழர்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், கனடாவில் நேற்றைய நிகழ்வில் சர்ச்சைக்குரிய விடயமாக மாறிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும், அவருடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்து கொண்டமையே குழப்ப நிலைக்குக் காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் அங்கிருந்து கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டு கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். கனடாவில் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியானதை அடுத்தே அவருக்கு எதிரான எதிர்ப்பலைகள் ஆரம்பமாகின. சுமந்திரன் கனடாவிற்கு வரக்கூடாது என்று அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

TAMIL Eelam news b594

இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை -வெளிவந்த அதிர்ச்சி தகவல் மக்கள் தற்போது வறுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது ஏன்? நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்குடனா இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adakkalanathan) கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 02ஆம் வாசிப்பு மீதான 05 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் பொருட்களின் விலை மேலும் உயருமென எதிர்வு கூறப்படுகின்றது. இதனை தடுப்பதற்கான வல்லமை இந்த அரசாங்கத்திடம் இல்லை. இந்நிலையில் இராணுவத்துக்கு பலகோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

TAMIL Eelam news b593

எவன் தமிழன் எனக்கேட்ட இறுமாப்பை நீ உடைத்தாய்! நெருப்புக்கு நேரியனே! ஊரார்கள் வலி வாங்கி உள்ளுக்குள் நீ துடித்தாய்! உருமறைத்த புலியாகி உயிருக்குள் நீ சிலிர்த்தாய்! பள்ளிக்குச் செல்லுவதை படிப்படியாய் நீ குறைத்தாய்! பதுங்குதற்கு முடிவெடுத்துப் படங்களையும் நீ மறைத்தாய்! விளையாடும் வயதினிலே விளையாட்டைத் துண்டித்தாய்! வீணர்களின் வெறிச்செயலை வெடிகுண்டால் தண்டித்தாய்! பாராண்ட மன்னர்களை படிப்பகத்தில் சந்தித்தாய்! பழந்தமிழர் புகழ்மீட்க பண்போடு சிந்தித்தாய்! எங்கென்ற ஏக்கத்தில் இளைத்தாளே அன்புத்தாய்! இவனன்றோ பிள்ளையென்று இனித்தாளே ஈழத்தாய்! ஈழத்தின் இருளழிக்க எழுந்து வந்த சூரியனே! ஈனத்தின் கருவழிக்க இடிகிழித்த வீரியனே! கண்ணிமைக்க மறந்துவிட்ட கடுமுழைப்புக் காரியனே! கண்டுசொல்ல கறையில்லா நெருப்புக்கு நேரியனே! இழந்திருந்த வீரத்தை இழுத்து வந்து போட்டவனே! சிதைந்திருந்த தமிழினத்தைச் சேர்த்துவைத்து மூட்டவனே! மரணத்தை மடியேந்தி மாதாவாய்க் கேட்டவனே! மறத்திமிரில் தமிழ்க்குடியின் மானத்தை மீட்டவனே! துளியளவும் நெறிபிறழா தூயமனக் காவலனே! துவண்டதமிழ் துளிர்க்கவென தூக்கிவிடும் ஆவலனே! தான்செய்த சிறுபிழை

TAMIL Eelam news 592

இதயங்களில் நினைவுகூர்ந்து விளக்கேற்றி ஆத்ம கடன் நிறைவேற்றுவோம்- மாவை விடுத்துள்ள அறிவிப்பு! இறந்த எம்மைவிட்டுப் பிரிந்த ஆத்மாக்களை நினைவுகூரும் முகமாக அமைதியாக எம், வாழுமிடங்களில், நம் இதயங்களில் நினைவுகூர்ந்து விளக்கேற்றி ஆத்ம கடன் நிறைவேற்றுமாறு இலங்கை தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு இறந்தவர்களின் ஆத்மாக்களை நினைவுகூருவதைத் தடைசெய்வது போர்களத்தைவிட தமிழ்பேசும் மக்கள் நெஞ்சில் ரணகளத்தை எரியவிடுவதாகவே இருக்கிறது. மனிதகுலத்தின் பாரம்பரிய மாண்புகளையும் அரசு அழித்தொழிக்கிறது. இலங்கையில் கடந்த 70ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுக்காலத்தில் மக்களும் தமிழ் நிலமும் இனக்கலவரங்களாலும், இனவிடுதலைக்கான போர்களத்திலும் இலட்சக்கனக்கான உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு ஆறாத ரணகளத்தில் மூழ்கிக்கிடக்கும் மனிதகுல வரலாற்றில் கறைபடிந்து கிடக்கும் நிலைமையை அனுபவித்து வருகிறோம். இறந்தவர்கள் ஆத்ம சாந்திக்காக அந்த ஆத்மாக்களை நினைவுகூர்ந்து பிரார்த்திக்கும், கண்ணீர்விட்டு கலந்து ஆறு

TAMIL Eelam news b592

பட்டப்பகலில் நடுரோட்டில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் நாட்டில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மஹரகம,பாமுனுவ வீதியில் பெனொருவரிடமிருந்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அபகரித்து சென்றுள்ளனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர். குறித்த நபர்கள் பஜாஜ் XJ 1733 வாகனத்தில் வந்தே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

TAMIL Eelam news b591

யாழில் வாக்குவாதத்தில் தொடங்கி வாள்வெட்டில் முடிந்த சம்பவம் யாழ். சுன்னாகம் - அம்பனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதில் 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தொல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் வாள்வெட்டு நடத்திய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.