முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b590

நெதர்லாந்தில் மாவீரர் நாளை குழப்ப முயன்ற சதி முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டின் செயற்பாட்டாளர் தயாவீது கூறுகிறார். நெதர்லாந்தில் மாவீரர் நாளை குழப்ப முயன்ற சதி முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டின் செயற்பாட்டாளர் தயா (Thaya) கூறுகிறார். நேற்று நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவது தொடர்பிலே வெளியாகியிருக்கிறது. அது சார்ந்து ஏன் இந்த நீதிமன்றத்திற்கு செல்லப்பட்டது? தீர்ப்பு என்னவாக அமைந்தது என்பது தொடர்பில் பதில் தருகிறார் தயா.

TAMIL Eelam news b589

யாழ்.இளம் வீராங்கனையின் உயிரை பறித்த கொடிய நோய்! சோகத்தில் அப்பகுதி அளவெட்டி அருணோதயா கல்லூரியின் சாதனை வீராங்கனையும், யாழ்.தேசிய மட்ட வீராங்கனையுமான கொடிய நோயால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவர் மரத்தன், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், Hockey, Netball, Volleybal, Elle என பல விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தேசிய மட்டங்களிலும் மாகாண, மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார். யாழ்.அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 29 வயதான காவேரி பிரதீபன் மூன்று வருடங்களாக Aplastic Anaemia என்ற கொடிய இரத்த சோகை நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 2020 ஆண்டு மேலதிக வைத்திய சிகிச்சைக்காக இந்தியாவிற்கு சென்றிருந்தார். இதையடுத்து, இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை, பலனின்றி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு

TAMIL Eelam news b588

லண்டனில் தீ விபத்தில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் : வெளியான புகைப்படம் லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம்: அடுத்தடுத்து வெளிவரும் தகவல் லண்டனில் தீ விபத்தில் சிக்கி இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயர்த்தை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய தலைநகரான லண்டனின் பெக்ஸ்லி ஹீதில் உள்ள குடியிருப்பு ஒன்றில், நேற்று (18) இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும், மகளும், மற்றும் மகளின் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. இதேவேளை, தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் திருகோணமலை சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தின் போது, குறித்த வீட்டின் ஜன்னல் வழியாக நபரொருவர் குதித்து தீக்காயங்களுடன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாக தெரியவந்துள்ளது. இதேவேளை வீட்டிலிருந்து குதித்த நபர் பெண்ணின் மைத்துனர் என்று கூறப்படுகிறது. அவருடைய உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தகவல்

TAMIL Eelam news b587

ஆஸ்திரேலியா: சிறை வைக்கப்பட்டிருந்த தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் சுமார் 8 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 4 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த 4 தஞ்சக்கோரிக்கையாளர்களும் ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் தற்காலிக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், இணைப்பு விசாக்களில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்ற நிலைப்பாட்டில் ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.

TAMIL Eelam news b586

புலிகளுக்கு எதிரான போர் தொடங்கும் முன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த மஹிந்த! சந்தஹிரு சேயாவின் மூலம் நினைவுகூரப்படும் போர்வீரர்களின் மனிதாபிமானப் பணியானது எமது வரலாற்றில் சுதந்திரத்திற்காக நடத்தப்பட்ட மிகக் கடினமான போர்களில் ஒன்றாக நான் கருதுகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபியை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் இன்று கலந்து கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடங்கும் முன் அப்போதைய இங்கிலாந்து பிரதமரை சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று நான் கூறியபோது, அது சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை என்று கூறினார். அதைப் பற்றி சில விடயங்களைச் கூறினார். இந்த விவகாரம் ஏற்கனவே சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்போது அவர் கூறினார். சர்வதேச அளவில் பல நாடுகளின் பங்களிப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இப்போது அதிலிருந்து விடுபட முடியாத

TAMIL Eelam news b585

வடக்கு கிழக்கு ஆயர் பேரவையின் அறிக்கையால் பெரும் கவலை -வெளியானது அறிக்கை (அறிக்கை இணைப்பு) வடக்கு கிழக்கு ஆயர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள போரினால் இறந்தோர் தொடர்பான தலைப்பிலான அறிக்கை பல தரப்பினருக்கும் அதிருப்தியையும் கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடக்கு கிழக்கு ஆயர்களுடன் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் சந்திப்பொன்றை நடத்தியதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

TAMIL Eelam news b584

யாழ்.பல்கலைக்கழக முன் வாயிலில் ஏற்பட்ட குழப்ப நிலை தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருநாள் பல்வேறு தடைகளையும் தாண்டி மாணவர்களால் யாழ்ப்பாண பல்கலையில் இடம்பெற்றதுள்ளது. இன்று (18) வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை மேற்க் கொள்வதற்கு வந்த நிலையில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியொகத்தர்களால் உள்நுழைய தடை விதிக்கப்பட்டது. இதேவேளை பல்கலையில் ஆன்மீக ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை தீபங்களை ஏற்றியுள்ளனர். மேலும், மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் வெளியில் நின்றமையை அவதானிக்கூடியதாக இருத்தது. இதேவேளை இராணுவ மோட்டார் வாகனங்களும் சென்றன. கடந்த வருடம் ஒரு மாணவன் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், பல்கலை மாணவர்கள் மீதான அடக்குமுறையை தட்டிக்கேட்க மாணவர் ஒன்றிய தேர்தலையும் நடாத்தாது பல்கலை நிர்வாகம் கொரோனா பரவலை காரணம் காட்டி இழுத்தடிப்பு செய்து வருவதாக குழுமியி