முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 864

 ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இருக்கும் மனசு கூட நயன்தாராவுக்கு இல்லையா? இணையத்தில் கேள்வி கேட்கும் ரசிகர்கள் தமிழ் சினிமா திரை பிரபலங்கள் பலரும் கொரோனா நிதியாக தங்களால் முடிந்த பண உதவியை செய்து வருகின்றனர். தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் என்ன செய்வது என தெரியாமல் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.   முதல் தொற்று விட இரண்டாவது கொரோனா தொற்று படு தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்திற்கும் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வீடியோ வாயிலாக கொரோனா நிதியாக தங்களால் முடிந்த அளவிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் பிரபலங்கள் பலரும் முன்வந்து கொரோனா நிதி கொடுத்துள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாயும், பெப்ஸி அமைப்பினருக்கு ஒரு லட்ச ரூபாயும் கொடுத்துள்ளார். தற்போது இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.  ஆனால் நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களே ஒரு லட்சம் ரூபாய் தரும் பொழுது நயன்தாரா மட்டும் ஏன் எந்த ஒரு நிதியும் கொடுக்காமல் உள்ளார் என கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால்

TAMIL Eelam news 863

 இஸ்ரேல் அதிபரின் அசத்தல் செயல்; வியந்துபோன இந்தியர்கள்! இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.   இதற்கிடையில், இஸ்ரேலுக்கும், காசாமுனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 10-ம் தேதி முதல் மோதல் வெடித்தது. இருதரப்பினரும் மாறி மாறி ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதில் கடந்த 11-ம் தேதி இஸ்ரேலின் அஷ்கிலான் நகரத்தை குறிவைத்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அஷ்கிலான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ‘கேர்கிவ்வர்’ பணியாற்றிவந்த கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த சௌமியா (30) என்ற உயிரிழந்தார். சௌமியா தான் பணிபுரிந்து வந்த வீட்டில் இருந்து கேரளாவில் உள்ள தனது கணவர் சந்தோஷ் இடம் வீடியோகால் மூலம் பேசிக்கொண்டிருந்தபோது ராக்கெட்ட் தாக்குதலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச

TAMIL Eelam news 862

சாகும்வரை அட்சியில் இருப்பதற்கான திட்டத்தை தற்பொழுதே போட வெட்டுள்ளார் ஸ்டாலின் தனது ஆட்சியில் 7 ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய ஸ்டாலின் ஏற்பாடு- ஜனாதிபதிக்கு கடிதம் ! ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.   இது தொடர்பாகத் தமிழக சட்டசபையிலும் கடந்த 2018இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தீர்மானத்தை ஏற்றுப் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சரவை தீர்மானத்தைக் குடியரசுத் தலைவர் ஏற்று 7 பேரை விடுதலை செய்ய அதில் கோரப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் எம்.பி டி.ஆர் பாலு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அலுவலகத்தில் அளித்தார். இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்கா

TAMIL Eelam news 861

 நிறைவேறியது கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இனறு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. சட்டமூலத்தின் முக்கிய சில சரத்துகளுக்கு எதிர்க்கட்சி வாக்கெடுப்பு கோரியும் வாக்கெடுப்பில் தோற்றனர். நாடாளுமன்றத்தில், நேற்றும், இன்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட்ட நிலையில் இன்று ஆளும் எதிர்க்கட்சிகளின் வாத விவாதங்களின் பின்னர் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு விடப்பட வேண்டுமா என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் கோரிக்கை விடுத்தார். எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு அவசியமில்லை

TAMIL Eelam news 860

 பல பேர்களில் மரணம் மக்களே விளிப்பாக இருங்கள் தனிமையாகச் செல்ல வேண்டாம் இறந்தவனிற்குத் தான் தெரியும் உன்மை நிலமை யாழ்.சுன்னாகத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறித்து வெளியான பல தகவல்கள்! சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்கொலையென்பது தெரியவந்துள்ளது. சுன்னாகம் மயிலங்காடு ஞானவைரவர் கோவில் பின் பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டது. அதன் பக்கத்தில் மண்ணெண்ணெய் கொள்கலன் ஒன்றும் காணப்பட்டது. எஸ்.பத்மநாதன் (வயது-75) என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார், அவர் தனிமையில் வாழ்ந்தவர். மேலும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.   இன்று காலை கோயிலுக்கு சென்றவர்கள், சடலத்தை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர். இந்த சம்பவத்தில் குற்றச்செயல்கள் தொடர்புபட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

TAMIL Eelam news 859

 வடமராட்சி பகுதியில் பெரும் துயரம்: மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்! வடமராட்சி கரணவாய் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பத்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரணவாய் சோளங்கன் பகுதியைச் சேர்ந்த திரு - செல்வராசா மகேசன் [அப்பன் ] [வயது 47 ] என்ற இளம் குடும்பத்தர் சுகயீனம் காரணமாக தீடிரென இன்று உயிரிழந்தார். குறித்த குடும்பத்தர் அப்பகுதியில் பல சமூக சேவைகளிலும் மக்களுக்கு வலிந்து உதவும் குணம் படைத்தவர் என்று தெரிவிக்கபடுகின்றது. இவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TAMIL Eelam news 858

 தமிழர்களுடன் பகைத்ததால் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள நிலை! - சி.வி.விக்னேஸ்வரன் "வீணாகத் தமிழர்களுடன் பகைத்து இன்று உலகமெல்லாம் கடன் வாங்கும் வங்குரோத்து நிலையை இலங்கை அரசு அடைந்துள்ளது." என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, "இந்தச் சட்டமூலத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி விடலாம் என்று எண்ணம் கொண்டிருந்த அரசின் கடிவாளத்தை உயர்நீதிமன்றம் கெட்டியாகப் பிடித்து வைத்துள்ளது. பல சரத்துக்கள் அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக உள்ளன என்று கூறியுள்ளது. இலங்கைக்குள் ஒரு சீன நகரத்தை உருவாக்க முனைகின்றது அரசு என்பதே அதற்கெதிரான குற்றம். பொறுப்பற்ற கடன் வாங்கலும் தமது மனித உரிமை மீறல்களால் உலக அரங்கில் இலங்கை தனிமைப்பட்டிருப்பதாலும் சீனாவின் அடியில் போய் விழவேண்டி வந்துள்ளது. இந்த வரைபை வர்த்தமானியில் பிரசுரித்த அதே நாளிலேயே மேலும் ஒரு சீனக் கடனை இந்த அரசு பெற்றுள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாங்கள் தொடர்ந்து