முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 376 தமிழீழப்பகுதியில் மக்களின் சிந்தனைகளை மாற்றும் தரகர்கள் நடப்பது என்ன?

 

யாழில் பிரம்மாண்டமாக இடம்பெற்று வரும் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி!

யாழில் பிரம்மாண்டமாக இடம்பெற்று வரும் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி! | Santhosh Narayanan S Grand Concert In Jaffna
 By Shankar 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் இன்றையதினம் (21-10-2023) பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது.

இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட படுகொலையை மறைக்கவே அதே நாளில் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இதன்போது, கலையும் கலாச்சாரமும் சிறந்து ஓங்கும் இந்த யாழ்ப்பாண மண்ணில் யாழ்கானம் என்ற இந்த இசை நிகழ்ச்சியை அளிப்பதில் சந்தோஷ் நாராயணனும் அவர் குழுவினரும் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர்.

யாழில் பிரம்மாண்டமாக இடம்பெற்று வரும் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி! | Santhosh Narayanan S Grand Concert In Jaffna

இம்மண்ணும் இம்மண்ணில் வாழும் மக்களும் கண்ட துயர்கள் அநேகம். ஒரு ஆண்டின் 365 நாட்களில் எந்த திகதியையும் எடுத்து வரலாற்று ஏடுகளைப் பின்னோக்கி புரட்டினாலும் அந்த திகதியில் ஒரு கொடூர சம்பவம் ஒரு துயர்மிகு சம்பவம் நிகழ்ந்திருக்கும்.

ஏன், இன்றும் இந்த திகதியில் சரியாக 36 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நடந்த கொடூரமான நிகழ்வை நாம் துயருடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.

கலை நிகழ்ச்சிகள் உள்ளத் துயர்களை நீக்கும் மருந்தாவன. அதனால் சந்தோஷ் நாராயணனும் அவரது குழுவும் இவ்விசை விருந்தை ஒரு இசை மருந்தாகவே மக்களுக்கு வழங்குகின்றனர்.

இந்நிலையில், பலதசாப்தங்களாக நடந்த யுத்தத்தில் மறைந்த எம் நாட்டு மக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திவிட்டு இம்மருந்தை அருந்துவதே பொருத்தமானதாய் இருக்கும்.

இயலுமானவர்கள் எல்லோரும் எழுந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகிறோம் - என தமிழிலும் ஆங்கிலத்திலும் தெரிவிக்கப்பட்டது.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?