முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 371 ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணை ராக்கெட்டுகள் எப்படி கிடைத்தது..

 

ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணை ராக்கெட்டுகள் எப்படி கிடைத்தது..! நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல்

ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணை ராக்கெட்டுகள் எப்படி கிடைத்தது..! நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல் | Israel Hamas War Update How Rockets Are Made

 By Sheron 16 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் ராக்கெட்டுக்கள் தாமாகவே தயாரித்திருக்க கூடும் என நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 07.10.2023 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய 5000 ராக்கெட்டுகள் வீச்சு தாக்குதலே காஸாவில் நடந்து வரும் போரின் துவக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

அவ்வாறான நிலையில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் பார்வையை மீறி வெளிநாடுகளில் இருந்து காசாவுக்குள் ராக்கெட்டுகளை கொண்டு வர சாத்தியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கையர்

ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கையர்


அப்படியானால் காசாவுக்குள்ளேயே தங்களுக்கு தேவையான "கசாம்" என்றழைக்கப்படும் ராக்கெட்டுகளை ஹமாஸ் போராளிகள் உருவாக்கி இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணை ராக்கெட்டுகள் எப்படி கிடைத்தது..! நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல் | Israel Hamas War Update How Rockets Are Made

ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் ராக்கெட்டுகளின் மூலப் பொருட்களில் முதன்மையானது, வீடுகளில் பயன்படுத்தப்படும் சீனி மற்றும் அடுத்தபடியாக கடைகளில் உரமாக கிடைக்கும் பொட்டாஷியம் நைட்ரேட் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ராக்கெட் உந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எதற்காக சீனி

சீனி மற்றும் உரத்தை சேர்த்த பின்பு தீயை மூட்டினால் அதிலிருந்து வெளிப்படும் ஆற்றலுடன் ஆக்ஸிஜன் வாயு கலந்து பின் அதினால் பிறப்பிக்கப்படும் சக்தி ராக்கெட் வேகமாக வானில் பறந்து செல்ல உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: காசா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம்

தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: காசா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம்


அடுத்தபடியாக ஹமாஸ் போராளிகள் சாதாரண தண்ணீர் குழாய்களை கொண்டு ராக்கெட்டின் உடற்பகுதியை உருவாக்கி இருக்கிறார்கள் என குறிப்பிடப்படுகிறது.

அந்த குழாய்க்குள் யூரியா நைட்ரேட்டையும் டி.என்.டி.(T.N.T) வெடி பொருளையும் கலந்தது மட்டுமன்றி வெடிக்கும் போது சுற்றியுள்ள பலர் பலியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆணிகளையும் பால் பேரிங்குகளையும் கலந்திருப்பார்கள் என நம்பப்படுகிறது.


இலகுவாக மடக்கக் கூடிய ஏவுதளத்தில் விரும்பிய கோணத்தில் வைத்து ஏவப்படும் கசாம் ராக்கெட்டுகளில் வழிகாட்டு மின்னணுக் கருவிகள் இல்லை. இதனால் அவை எங்கே சென்று விழும் என்பது யாருக்கும் தெரியாது. 

எனினும், இந்த திட்டத்திற்கு குறைந்த அளவிலான செலவினமே இருக்கின்றமையினால் கசாம் ராக்கெட்டுகளை ஆயிரக்கணக்கில் தயார் செய்து ஏவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் தலைவர்களை நிர்மூலம் செய்வதில் இஸ்ரேலின் உளவுப் பிரிவின் நகர்வு(video)

ஹமாஸ் தலைவர்களை நிர்மூலம் செய்வதில் இஸ்ரேலின் உளவுப் பிரிவின் நகர்வு(Video)


இருப்பினும் மறுபுறம் இந்த ராக்கெட்டுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் பல நூறு கோடிகளை செலவிட வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இஸ்ரேல் வசம் உள்ள அயர்ன் டோம் ராக்கெட் தடுப்பு அமைப்பில் பயன்படுத்தும் ஏவுகணை ஒவ்வொன்றின் விலையும் 1கோடி ரூபாய்க்கும் மேல் என இராணுவ தளபாட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?