முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 419 நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு

 

Type 1 நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு தயாராகிறது

Type 1 நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய implants - உட்பொருத்திகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்படுகிறது.

Woman injecting insulin using syringe close-up of hands

Woman injecting insulin using syringe Credit: MOODBOARD

Pancreas என்ற கணையத்திலுள்ள கலங்களுள் (cells) தீவுசெல்கள் islet cells என்பவை ஒரு சிறப்பு தன்மையைக்கொண்ட செல்களாகும். உடலிலுள்ள immune system என்ற நோயெதிர்ப்புத்தொகுதி pancreas என்ற கணையத்திலுள்ள இந்த சிறப்பு தன்மையைக்கொண்ட தீவுசெல்களை islet cellsத் தாக்குவதால் கணையம் insulin சுரப்பதை நிறுத்திவிடுகிறது. இதனால் உடலில் blood glucose level அதிகரிக்கிறது. இதைத்தான் type 1 diabetes அல்லது நீரிழிவு என்கிறோம்.

Type 1 Diabetic அல்லது நீரிழிவு நோய்க்கான சிகிச்சை தொடர்பாக மிக சிரமமானதும் சிக்கலானதுமான விடயம் என்னவென்றால் ஊசிமூலமாக insulinஐ குறைந்தது தினமும் ஒருமுறை ஏற்றவேண்டியிருப்பதுதான். Pancreas என்ற கணையம் போதுமான insulinஐ உற்பத்திசெய்ய முடியாதபோது, ஊசிமூலமாக insulinஐ நோயாளிகளுக்கு அடிக்கடி ஏற்றும் போது இது மனித உடல் உற்பத்தி செய்யும் insulin செயலாற்றுவது போல தொடர்ந்து செயலாற்றுவதில்லை. அவர்களது blood glucose levels ஆரோக்கியமான அளவில் இருப்பதில்லை. கணையம் உற்பத்தி செய்யும் சீரான அளவில், தொடர்ச்சியாக insulin உடலுக்கு விநியோகமாவதில்லை.
Diabetes Test
Source: Press Association
Implantable insulin pump இப்போது பயன்பாட்டிலுள்ளது. இது தோலுக்கடியில் ஊடுருவக்கூடியதாக தோலுக்கு மேலே செருகி வைக்கப்படும் கருவியாகும். அதிலிணைக்கப்பட்டுள்ள catheters என்ற குழாய் peritoneal cavity என்ற ஈரல் அமைந்துள்ள உட்குழிவு வரை செல்லும். ஈரல்தான் insulinஐ உறிஞ்சி blood glucose levels ஐ maintain அல்லது பராமரிக்கிறது. இது நாளாந்த உணவு உடகொள்ளும் இடைவெளி என்பவற்றைப் பாதிப்பதில்லை. நாளாந்த ஊசிக்குத் தேவையானதைவிட மிக க் குறைந்த அளவு insulin மட்டுமே தேவைப்படும்.

Advertisement
இதிலுள்ள பாதிப்புகள் என்னவென்றால் தோலுக்கடியில் fatty lumps என்ற கொழுப்புக்கட்டிகள் உருவாகும் என்பதும் நாள் முழுவதும் இந்த கருவியைச்சருமத்தின் மேற்பகுதியில் அணிந்திருக்கவேண்டும் என்பதும்தான். அத்தோடு இவ்வகைக் கருவிகளின் விலையும் அதிகம்.

ஆனால் Type 1 நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய implants உட்பொருத்திகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்படுகிறது. Insulin ஐச் சுரக்கச்செய்யும் islet cells என்ற கலங்களை உடலினுள் implant என்ற வகையில் பொருத்துவது என்பதாகும். ஏற்கனவே இந்த திட்டம் ஆராய்ச்சியில் இருந்தாலும் இந்த செயற்கைக் கலங்களில் oxygen பிராணவாயு தீர்ந்துபோகும்போது insulin உற்பத்தியாவது நின்றுபோகும் என்ற சிக்கல் எழுகிறது. இதற்கான ஒரு தீர்வை தற்போது MIT - Massachusetts Institute of Technology முன்வைத்திருக்கிறது.
Pixabay
Source: Pixabay
MIT ஆராய்ச்சியின் மூலம் முன்வைக்கப்படும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் அனுகூலம் என்னவென்றால், உடலினுள் வைக்கப்படும் implant களில் ஆயிரக்கணக்கான islet cells என்ற கலங்கள் இருப்பதுமட்டுமல்ல இந்தக் கலங்கள் தமக்குத் தேவையான oxygen ஐத் தாமே தயாரித்துக்கொள்ளும். அதாவது, தமக்குத் தேவையான oxygen ஐத் தாமே தயாரித்துக்கொள்ளும் ஆலையையும் (factory) தன்னகத்தே கொண்டிருக்கும். உடலில் உள்ள water vapour என்ற நீராவியை இந்த cell கள் பிரித்து oxygen ஐப் பெறுகின்றன.

இந்தக் கலங்களை விஞ்ஞானிகள் நீரிழிவு நோய்கண்ட எலிகளின் உடலில் பொருத்தியபோது, சுமார் ஒரு மாத காலத்திற்கு எலிகளின் உடலில் blood glucose levels ஐச் சீராக வைக்கமுடிந்தது. இப்போது இதே implant ஐச் சற்றுப் பெரியதாக சுமார் ஒரு chewing gum வில்லையின் அளவினதாகத் தயாரித்து மனித உடலில் பொருத்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆராய்ச்சிக்குத் தலைமைதாங்குபவரும் MITயின் department of chemical engineering இன் பேராசிரியருமான Daniel Anderson கருத்து தெரிவிக்கும் போது, ‘மனித உடலின் ஒரு அங்கமாக electronic life support ஆக இயங்கவல்ல இந்த implant கள் insulinஐ உற்பத்திசெய்வதோடு, செயற்கைக்கலங்களுக்குத் தேவையான oxygen ஐயும் தயாரித்துக்கொள்ளும் திறன் கொண்டவை’ என்று தெரிவித்திருக்கிறார்.
insulin pump
An insulin pump that is attached to the skin of the stomach. Source: Getty / Getty Images
டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கான சிகிச்சையாகவே இந்த புதிய முறை பாரக்கப்பட்டாலும் இதே முறையைப் பயன் படுத்தி வேறு நோய்களுக்கும் தீர்வு காணமுடியும் என்று MIT யின் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இந்த ஆராய்ச்சியில் MIT research scientists Siddharth Krishnan, Robert Langer ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.

இதற்கு முன் இதையொத்த implantகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவற்றிலுள்ள பிரதான குறைபாடு என்னவென்று பார்க்கும்போது, இவ்வகை implantகளை மனித உடல் எல்லா வேளைகளிலும் ஏற்றுக்கொள்வதில்லை. உடல் இந்த implant களை நிராகரிக்கும்போது, immunosuppressive drugs என்ற மருந்துகளையும் நோயாளி தொடர்ந்து நீண்டகால அடிப்படையில் பயன்படுத்தவேண்டிய நிலைமை உருவாகும். இந்த immunosuppressantகள் காரணமாக நீரிழிவு நோய் மோசமாகலாம் என்பதோடு, உடலில் கொப்புளங்கள் ஏற்படுதல், களைப்பு ஏற்படுதல், மயிர் உதிர்தல், தலைவலி, உயர் இரத்த அழுத்தம், வாய்ப்புண், osteoporosis என்ற எலும்புப்புரை என்பன ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

Stem cells என்ற முதல் நிலை உயிரணு மூலமாக நிர்மாணிக்கப்பட்ட implantகளை -உட்பொருத்திகளைஆராய்சியாளர்கள் கண்டுபிடித்தபோதும் இந்தச் சந்தர்ப்பத்திலும் நோயாளி immunosuppressant என்ற மருந்துகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் இப்போது MIT யில் ஆராய்ச்சியிலிருக்கும் புதிய implant முறை உடலில் கச்சிதமாகப் பொருந்திக் கொள்வதால் immunosuppressant மருந்துகள் நோயாளிக்குத் தேவைப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது.
Insulin Pen
Insulin Pen
இந்தப்புதிய implantsகளிலுள்ள மற்றொரு சிறப்பு என்னவென்றால் இவற்றுக்கு battery என்ற மின்கலமோ அல்லது வயர்களோ தேவையில்லை என்பதுதான். உடலுக்கு வெளியே வைக்கக்கூடிய tuned magnetic coil தேவையான 2 volt அளவிலான மின்சாரத்தை கம்பியற்ற முறையில் wireless முறையில் இந்த implant இற்கு கடத்தவல்லது. இந்த implant இலுள்ள சிறிய antenna இந்த மின்சாரத்தை wireless முறையில் உறிஞ்சிக்கொள்ளும். இந்த ஏற்பாட்டிற்கு resonant inductive coupling என்று பெயர். இவ்வகைக் கருவிகளை living medical devices என்று அழைக்கிறார்கள்.அமெரிக்க நாணயமான quarter- 25 சத நாணயம் அளவினதானது இந்தக் கருவி. சுமார் 1 அங்குல விட்டத்தைக்கொண்டது. நமது 20 சத ஆஸ்திரேலிய நாணயத்தை ஒத்த அளவுடையது என்று சொல்லலாம்

உடலினுள் பொருத்தப்படும் எந்த ஒரு உபகரணமும் immune system என்ற நோயெதிர்ப்புச் சக்தியால் எதிர்த்தாக்குதலுக்கு உட்படுத்தப்படும். இதன் காரணமாக இந்த உபகரணத்தின் புறத்தில் fibrosis என்ற tissue இழையம் போர்வைபோல மூடிக்கொள்ளும். இதன் காரணமாக இந்த implant இன் ஆற்றல் பாதிக்கப்படும். ஆனால் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின்போது, fibrosis tissues உருவானபோதும் MIT கண்டுபிடித்துள்ள இந்தக்கருவியின் ஆற்றல் குறையவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மனித உடலில் பொருத்தப்படும் இவ்வகையான implantகள் நீண்ட கால அடிப்படையில் உடலுக்குள் வைத்திருக்கக் கூடிய விதத்தில் பயன்படுத்தப்படும் material என்ற ஆக்கப்பொருள் நிலையானதாக -அதாவது எளிதில் நிலைகுலையாத தன்மையைக்கொண்டதாக இருக்கவேண்டும் என்பதிலும் ஆராயச்சியாளர்கள் சிரத்தை எடுத்துவருகிறார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?