முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 870 முஸ்ஸிம்ங்களை இலக்கு வைக்கும் சிங்கள வெறியர்கள் .

விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனத்துடன் காலியில் ஒருவர் கைது புலிகளின் தகவல் தொடர்பு சாதனத்துடன் கைது காலி நகரில் உள்ள தையல்கடைக்காரர் ஒருவரிடமிருந்து இரண்டு புகை குண்டுகள், 10 விமான எதிர்ப்பு தோட்டா உறைகள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக காலி காவல்துறையினர் தெரிவித்தனர். தலபிட்டிய, காலி, தக்கியா வீதியில் வசிக்கும் 63 வயதுடைய தையல்கடைக்காரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனத்துடன் காலியில் ஒருவர் கைது | Man Arrested In Galle With Communication Device ஆயுதங்கள் மறைத்து வைப்பு சந்தேக நபர் காலி நகரில் தையல் நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அங்கு ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனத்துடன் காலியில் ஒருவர் கைது | Man Arrested In Galle With Communication Device சஹ்ரானின் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிடுக்கப்பட்டுள்ளதாக காவல்துற

c 869 மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு:

மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு: நெடுங்கேணியில் கொதித்தெழுந்த முதியவர் (Video) மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு கிடைக்கும் என வவுனியா - நெடுங்கேணியில் முதியவர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி கந்தசாமி ஆலய முற்றத்தில் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த மண்ணிலே ஏன் பிறந்தோம் என்றுதான் சிந்திக்க தோன்றுகின்றது. பட்டதாரிகள் மாணவர்கள் உரிமைக்காக போராடிய போது பயங்கரவாத சட்டம் என்று கூறி கைது செய்கிறார்கள். ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு ஒரு ஆசனம் கூட இல்லை. அவர் எங்களுக்கு ஆட்சி புரிவதென்றால் எவ்வாறு, இது பாரத பரம்பரை, இது வன்னிமண் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதலாம் இ

c 868 யார் பக்கம் சிங்களவர்கள் புரிய மறுக்கும் தமிழர்கள் .

விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்ட கோட்டாபயவை அடித்து விரட்டிய நன்றிகெட்ட தேசம் இது! கொதித்தெழும் தேரர் கடுமையான பயங்கரவாதத்தில் இருந்து நமது நாட்டை விடுவித்த ஒரு தலைவரைப் பாராட்ட முடியாத அளவுக்கு நமது தேசம் நன்றி கெட்டது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நன்றியற்ற தேசம்.. விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்ட கோட்டாபயவை அடித்து விரட்டிய நன்றிகெட்ட தேசம் இது! கொதித்தெழும் தேரர் | Gotapaya Who Fled The Country நாட்டைக் காப்பாற்றிய தலைவர் கோட்டாபய நாட்டை விட்டு துரத்தப்பட்டு நாடு விட்டு நாடு செல்கிறார்.கடுமையான பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய ஒரு தலைவருக்கு நன்றி செலுத்தாத இந்த தேசம் மிகவும் நன்றியற்றது. கருணை காட்டுவதில் நமக்கு முதல் பாடம் கற்பித்தவர் புத்தர். புத்தராக வருவதற்கு அடைக்கலம் தந்த போதியில் ஒரு வாரம் பூஜை செய்து நன்றியறிதலின் மதிப்பை உலகுக்கு எடுத்துரைத்தார். ஆனால் நம் மக்கள் நன்றி மறந்துள்ளனர். வயல்களை உழுவதற்குப் பயன்படும் மண்வெட்டியைக் கூடக் கும்பிடும் எமது மக்களுக்கு இந்த நாட்டை விடுவித்த த

c 867 பிரபல பாடசாலை அதிபர் கைது

மாணவர்களை வன்கொடுமை புரிந்த பிரபல பாடசாலை அதிபர் கைது பல மாணவர்கள் துஷ்பிரயோகம் இரத்தினபுரியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களை வன்கொடுமை புரிந்த பிரபல பாடசாலை அதிபர் கைது | Principal In Custody Sexually Abusing Students பணப்பரிசில்கள் வழங்கும் அதிபர் குறித்த பாடசாலை மாணவர்களை அதிபர் வெகுநாட்களாக தனது விடுதிக்கு அழைத்து அவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் நேற்று (23) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர், கடுமையான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாணவர்களை வன்கொடு

c 866 வெளிநாட்டுப் பெண்களை ஓரம் கட்டும் அயல் நாட்டவர்கள்

இந்தியப்பெண்ணுக்கு லண்டனில் நேர்ந்த நிலை…!!! பெண்களே ஜாக்கிரதை… . இந்தியாவை சேர்ந்த 48 வயதுடைய உஷா சர்மா லண்டனில் வசிக்கிறார். இவர், பல விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இந்நிலையில் இவர் லண்டனில் இருக்கும் Vஉஎ cஇனெம திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றிருக்கிறார். அப்போது, இடைவேளையில் அவர் கழிவறைக்கு சென்ற போது, திடீரென்று அவரை சுற்றி வளைத்த பெண்கள் சிலர், அவரின் கைகளை மடக்கி பிடித்து, அவர் வைத்திருந்த பணம், கிரெடிட் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை எடுத்துக்கொண்டனர். உடனே, அவர் தன் போனை எடுத்தவுடன் அவரை பலமாக அடித்து போனையும் பிடுங்கிக் கொண்டு தப்பியுள்ளனர். அவர் உதவி கேட்டு கத்தியிருக்கிறார். எனினும், ஒருவர் கூட வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், திரையரங்கின் பாதுகாவலர்கள் அங்கு தான் இருந்திருக்கிறார்கள்.அவர்களின் முன்பு உஷா அணிந்திருந்த கைக்கடிகாரத்தை பறிக்க ஒரு பெண் முயற்சித்திருக்கிறார். அவர் உதவி கேட்டு கதறியும் பாதுகாவலர்கள் உதவவில்லை. உடல் முழுக்க காயமடைந்து உஷா வெளியே வந்திருக்கிறார். அதன் பின்பு அருகே நின்ற ஒரு பெண்ணிடம் ப

c 865 குயின்ஸ்லாந்து மாநிலத்தில்குடியேற வாய்ப்பு!!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வெளிநாட்டவர் குடியேற வாய்ப்பு!! குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு குடிபெயர விருப்புபவர்களுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான குடிவரவு திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு குடிபெயர தங்களின் விருப்ப படிவத்தை (EOI) ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரிகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களும் 16 ஆகஸ்ட் 2022 முதல் தங்களின் விருப்ப படிவத்தை (EOI) சமர்பிக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள். 2021-22இல் திறமை அடிப்படையில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் குடிபெயர சுமார் 16,500 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான அதன் குடிபெயர்வு திட்டத்தின் கீழ், அம்மாநிலத்திற்கு 4,435 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. Advertisement 2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் குயின்ஸ்லாந்து Skilled Migration Program (subclass 190 and subclass 491)-க்கு தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும். ஆகஸ்ட் 16ஆம

c 864 தேர்தலில் அபார வெற்றி பெற்ற தமிழர்

லண்டனில் கவுன்சிலர் தேர்தலில் அபார வெற்றி பெற்ற தமிழர் சென்னையை சேர்ந்தவர் அப்பு சீனிவாசன். இவர் லண்டனில் உள்ள பிரதான எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் குராய்டன் பகுதியின் கவுன்சிலராக அங்குள்ள மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்பு கடந்த 1990ம் ஆண்டு பொறியியல் துறையில் மேல்படிப்பிற்காக லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு படித்துக் கொண்டே வேலை பார்த்தார், பின்னர் படித்து முடிப்பதற்குள் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. லண்டனில் கவுன்சிலர் தேர்தலில் அபார வெற்றி பெற்ற தமிழர் | A Tamil Who Won The Councilor Election In London தனது அறிவால் ஆற்றலால் படிப்படியாக வளர்ந்து அந்த நிறுனத்தின் முதன்மை அதிகாரியானார். இவரால் நிறுவனம் வளர்ந்தது, நிறுவனத்தால் இவரும் வளர்ந்தார். இப்படி படிப்படியாக முன்னேறி லண்டனில் ஒரு முக்கியமான நபராக மாறினாலும் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து சொந்தமாக தொழில் துவங்குவது வரை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் பிரச்னைகளும் மிக அதிகம். தமிழர்கள் மனதில் தனி இடம் பிடித்த சீனிவாசன் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் புதிதாக லண்டனுக்கு பிழைக்கவரும் எந்த தமிழனுக்கும் ஏற்