முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 172

  லெப்.கேணல் மணிவண்ணன் அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது. அது ஒன்றே அவன் மட்டக்களப்பிலிருந்து வன்னிவரை பயிற்சிக்காகப் பயணிப்பதற்குத் துணை புரிந்தது. இந்தப் பயணத்தில் மட்டுமல்ல மணிவண்ணனின் போராட்டப் பயணம் முழுவதிலும் துணிச்சலும் வீரமும் ஓயாத உழைப்பின் வடுக்களும்தான் நிறைந்திருக்கின்றன. ஜெயசிக்குறு படைநகர்வை எதிரி மேற்கொண்டிருந்த காலம். ஓய்ந்திராமல் போராளிகள் சமரிட்ட நாட்கள். புளியங்குளத்தில் வலிமையான ஒரு தடுப்புச்சமர். ஒரு வாழ்வு

TAMIL Eelam news171

 தியேட்டரில் 100 சதவீதம் அனுமதி வழங்கியதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்தநிலையில், அவருக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி இருந்த நிலையில் திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று தற்போது 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதற்காக திரைப்பட சங்கங்களும், நடிகர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிப்பது ஆபத்தானது. ஒரு சினிமாக்காரியாக நான் யோசிக்கவில்லை. இப்போது கொரோனா வைரஸ், சீனா வைரஸ் என்று அழைக்கிறோம். அது சினிமா வைரஸ் என்ற பெயரை எடுக்க வேண்டுமா? இந்த ஆபத்தான முடிவை முதல்-அமைச்சரும், நடிகர்களும், தியேட்டர் அதிபர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா பரவி மீண்டும் ஊரடங்கை பிறப்பிப்பதற்கு பதிலாக தற்போது ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறைவுதான்” என்று குறிப்பிட்டு உள்ளார். கஸ்தூரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை குஷ்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

TAMIL Eelam news 170

 ஈழ தேசத்தின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் வேலுப்பிள்ளை அவர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் 2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார். மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் 2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார். ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது. யுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சிங்கள கொடூர அரசு அவரை அவ் முகாமை விட்டு செல்ல அனுமதிக்காமல் தனது கோர முகத்தை காட்டி நின்றது . வார்த்தைக்கு வார்த்தை மனித உரிமையை உச்சரிக்கும் வல்லரசு நாடுகளும் சர்வதேச நாடுகள் அதை கண்டும் காணா

TAMIL Eelam news 169

 சலுகைகளுக்காக…….. எவரிடமும் நாம் கைநீட்டமாட்டோம். சலுகைகளுக்காக…….. எவரிடமும் நாம் கைநீட்டமாட்டோம். எனது அன்புக்குரிய மக்களே! இந்த தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கையின் பயனாக எமது பிரச்சினைக்கு ஒரு இறுதியான அரசியற் தீர்வு ஏற்படும் என்பதில் எமக்கு நம்மிக்கை இல்லை. இனவெறி கொண்ட சிங்கள – பௌத்த தலைமைக்கு அப்படி திடீரென மனமாற்றம் ஏற்படுமென நாம் எதிர்பார்க்கவில்லை. தமிழருக்கு நீதி வழங்க வேண்டும் என்ற தார்மீக சிந்தனைக்குப் பதிலாக, தமிழர்களை மீண்டும் ஏமாற்றி ஆயுதப் புரட்சிப் போராளிகளை அடிபணியச் செய்யவேண்டும் என்பதே அரசின் அந்தரங்கத் திட்டமாகும். 35 வருட அரசியல் வரலாற்றில் மீண்டும் மீண்டும் ஏமாந்துபோன கசப்பான அரசியல் வரலாற்றுப் பாடங்களில் நாம் நிறையக் கற்றுத் தெளிந்திருக்கிறோம். ஆகவே பேச்சுக்கள் என்ற இந்த இராஜதந்திரப் பொறிக்கிடங்கில் நாம் சிக்குப்படப் போவதில்லை என்பதை நான் உறுதியாக திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம். தாங்கமுடியாத துன்ப, துயரங்களை அனுபவித்திருக்கிறோம். ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப்

TAMIL Eelam news 168

  தமிழீழத்தில் வாழவேண்டிய வயதில் இளம் சாமுதாயத்தினர் பெண்களோடு தேவையில்லாத தொடர்புகளை ஏற்ப்படுத்தி, தேவையில்லாத முறன்பாடுகளால் அவர்களிற்குள் பிரிவு ஏற்படுகின்றது. அதை தாங்கிக்கொள்ளும் போதிய அறிவு இல்லாத கரணத்தால் தங்களைத் தாங்களே அளிக்கும் இளிவான நிலைகளைக் கண்டு எமது ஒட்டுமொத்த சமுதாயமே கவலையடைகின்றது. மேலும் தெரியவருவதாவது சஜீத் 24 முல்லைத்தீவு என்ற இளைஞன் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்துயிருத்ததாகவும் திடிரென அவர் மறுத்தகாரணத்தால் அவர் தனது உயிரை அளித்ததாகத் தெரியவருகின்றது, பெண்களும் சரி ஆண்களும்சரி இவ்விடயத்தில் போட்டிபோட்டுக்கொண்டு தங்களை அளிப்பதை காணக்கூடியவாறு உள்ளது. எதிர்காலத்தில் இளைய தலைமுறைக்கு ஆண் பெண் விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி கடமை எமது ஆசிரியர் சமுகத்தையே சாரும்.

TAMIL Eelam news167

 28 வருட சினிமா வாழ்க்கையில் ரசிகர்களுக்காக தளபதி எடுக்கபோகும் ரிஸ்க்.. காட்டுத்தீ போல் பரவும் சம்பவம்! நடிகர் விஜய் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளிவர உள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் தியேட்டரில் 100 % இருக்கைகளுடன் ரசிகர்களை அனுமதிக்குமாறு தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு முதலில் செவிசாய்க்காமல் இருந்த முதல்வர் இன்று தியேட்டரில் 100% இருக்கைகளுடன் ரசிகர்கள் படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என தெரிவித்திருந்தார். இதனால் தற்போது சினிமா ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால் பிரபலம் ஒருவர் விஜய் 100% இருக்கைகளுடன் ரசிகர்களை அனுமதிக்குமாறு கேட்டுள்ளார், ஆனால் விஜய்யும் ரசிகர்களுடன் உட்கார்ந்து தியேட்டரில் படம் பார்ப்பாரா ? என சாமான்ய மனிதன் போல் கேள்வி எழுப்பி உள்ளார்.   விஜய் ரசிகர்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பார், இதனால் தியேட்டரில் தனது ரசிகர்களுடன் விஜய் படம் பார்ப்பதற்கு அதிக வாய்ப்புவுள்ளது என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இது சாதகமா அல்லது பாதகமா? என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களே முடிவெடுக்க வேண்டும்.  

WWW.TAMIL Eelam news 166

 புத்தாண்டில ஈழத்தமிழர்தேசம் எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடுகள் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை! தமிழர் தாயகத்தின் மீது தனது தடங்களை ஆழப்பதித்துள்ள சிங்களப் பேரினவாதப்பூதம், தனது கோரப்பற்களைக் கொண்டு மக்கள் மீதான கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பினை எதிர்கொள்வதற்கான சவால் மிக்கதொரு ஆண்டாகவே மலர்ந்துள்ள இப் புத்தாண்டு அமையும் என தெவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஈழத்தமிழ் தேசம் இதனை எதிர்கொள்வதற்கான ஏழு வியூகங்களை முன்வைத்துள்ளார். ஈழத்தமிழர் தேசம் இவ் வருடத்தின் போது எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்த சில விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன் தனது புத்தாண்டுச் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளதோடு, ஈழத்தமிழர் தேசத்தின் இறைமையை வலியுறுத்தி, சிங்கள அரசின் மேலாதிக்கத்தில் இருந்து தமிழர் தேசத்தினை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழீழ மக்களின் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான தனது முயற்சிகளைத்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்வதுடன், கீழ் உள்ள ஏழு விடயங்கள் குறித்தும் தாயகத் தலைவர்கள் எடுக்கும் சாதகம