முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 406 சம்பந்தனின் ஆசை இதுவே!அநுரகுமார திஸாநாயக்க

 

சம்பந்தனின் ஆசை இதுவே!...கனடா மக்களுக்கு அநுர கூறிய செய்தி

சம்பந்தனின் ஆசை இதுவே!...கனடா மக்களுக்கு அநுர கூறிய செய்தி | Sampanthan Talked With Anura Anura Said
Anura Kumara DissanayakaR. SampanthanSri Lanka PoliticianCanada
 6 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜையாக இருக்க விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தம்மிடம் கூறியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கனடா வாழ் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

"சம்பந்தனுடைய சில அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. ஒருநாள் சம்பந்தன் என் கைககளைப் பிடித்துக் கொண்டு "அநுர, நான் இலங்கையன் என்பதனை இந்த உலகிற்கு சத்தமிட்டுக்கூற ஆசை படுகின்றேன்.

ஆனால்  இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜை என கூறிக்கொள்ள நான் விரும்பவில்லை.”  என கூறினார். அது நியாயமானது அல்லவா.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை


இரண்டாம் தரப்பிரஜை

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே என்னிடம் “என்னால் இந்த நாட்டில் செல்லக்கூடிய அதிகபட்ச தூரத்தை நான் அடைந்து விட்டேன். நான் அமைச்சுப் பதவியின் மூலம் அதனை அடைந்து விட்டேன்.” என்றார்.


ஜெயராஜின் இனத்துவ அடிப்படையில் அவரினால் இந்த நாட்டில் அமைச்சராக மட்டுமே பதவி வகிக்க முடியும் என உணர்ந்தால் அது நியாயமானதல்ல.

ஜனாதிபதியாக முடியுமா பிரதமராக முடியுமா என்பது வேறு கதை. எனினும், ஒருவர் தனது இனம், மதம், கலாச்சாரத்தின் அடிப்படையில் ஓர் பதவியை அடையவே முடியாது என கருதும் சூழ்நிலையானது ஆரோக்கியமானதல்ல.

நாம் என்ன கூறினாலும், உனக்கு என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினாலும், ஒருவர் தான் இரண்டாம் தரப் பிரஜை என உணர்ந்தால் இந்த நாட்டில் ஏதோ ஓர் பிரச்சினை இருக்கின்றது என்பது நிதர்சனமானது.

அரசியலில், அரசியல் சந்தர்ப்பங்களில் நியாயமான முறையில் இணைந்து கொள்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்.”  என அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?