முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 367 இலங்கையில் வரவுள்ள அடுத்த சட்டம்?

 

இலங்கையில் இந்த வயதுக்குட்பட்ட சிறுமிகள் தன் விருப்பப்படி உடலுறவு கொண்டால்?

இலங்கையில் இந்த வயதுக்குட்பட்ட சிறுமிகள் தன் விருப்பப்படி உடலுறவு கொண்டால்? | 14 To16 Yearls Old Girls Sex Their Own Free Punish
Dr Wijeyadasa RajapaksheSri LankaSri Lanka Government GazetteGossip TodayChild Abuse
 4 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தை திருத்துவதற்கான மசோதா கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி அன்று வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.

நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவின்படி, குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 ஐத் திருத்தியமைத்து வெளியிடப்பட்டுள்ளது.


முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, 14 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமி தனது சம்மதத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் தண்டனையை எளிதாக்க முன்மொழியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நீதியமைச்சர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு எழுத்து மூலம் உடன்படவில்லை என அறிவித்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்றையதினம் (22-03-2024) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்படி, குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்களை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் சங்கம் நீதியமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?