முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 335 யாழில் இடம்பெற்ற பாடல் போட்டியில் பல லட்சம் பணத்தை வென்ற பாடகிகள்

வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரின் அடாவடி : நிர்வாணமாக்கப்பட்ட பக்தர்கள்

வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரின் அடாவடி : நிர்வாணமாக்கப்பட்ட பக்தர்கள் | Vedukkunari Kovil Issue Accusation Against Police
 By Kathirpriya 9 days ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டர்வர்களின் வேட்டியை பலவந்தமாக களைந்து அரை நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரிக்கெதிராக குற்றச்சாட்டுகள் வலுப்பெற்று இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரி வேட்டியை கொடுக்க வேண்டாம் எனக் கூறி அவர்களை அழைத்துச்சென்றதாகவும் இனவாதத்தோடு மிலேச்சத்தனமாக நடந்துகொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி நிகழ்வுகளின் போது அங்கே பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மிகப் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

காவல்நிலைய பொறுப்பதிகாரியின் கீழ்த்தரமான செயல் : வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகம் கடும் கண்டனம்

காவல்நிலைய பொறுப்பதிகாரியின் கீழ்த்தரமான செயல் : வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகம் கடும் கண்டனம்

பூஜைக்கான ஏற்பாடு

சிவராத்திரிக்கு முன்பிருந்தே ஆலய நிர்வாகத்தினர் மீது காவல்துறையினர் அடக்குமுறைகளை பிரயோகித்து இருந்தனர், ஆலய நிர்வாகத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்த போது ஆலயத்திற்கு எந்தவித பொருட்களையும் கொண்டு செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.


மேலும், தூர இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்களை 5 கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல், குடிநீரை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை.

5 கிலோமீற்றர் நடந்து சென்று குழந்தைகள் உட்பட பலர் தண்ணீர் தாகத்தில் இருந்த போதும் அதனை எடுத்துச் செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை, இதன்போது அங்கு பெரும் குழப்பநிலை நிலவி நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின் மதியம் 2 மணிக்கு பின்னர் குடி நீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

வெடுக்குநாறிமலை அராஜகம்: மட்டக்களப்பில் வெடிக்கவுள்ள போராட்டம்

வெடுக்குநாறிமலை அராஜகம்: மட்டக்களப்பில் வெடிக்கவுள்ள போராட்டம்

காவல்துறையினர் கையகப்படுத்தினர்

அப்படி பாடுபட்டு கொண்டு செல்லப்பட்ட தண்ணீரையும் மாலை நேரம் காவல்துறையினர் திறந்து வெளியேற்றி மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர்.

வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரின் அடாவடி : நிர்வாணமாக்கப்பட்ட பக்தர்கள் | Vedukkunari Kovil Issue Accusation Against Police

பின்னர், அங்கிருந்த பக்தர்களை அச்சுறுத்தி வெளியேற்ற முற்பட்டனர், சிவனுக்கு தயாரிக்கப்பட்ட  உணவுப் பொருட்களையும், பாத்திரங்களையும் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள்.

10 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியுடைய பொருட்களை காவல்துறையினர் பலவந்தமாக கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர், மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பலவந்தமாக சப்பாத்து கால்களுடன் நுழைந்த காவல்துறையினர் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.

வெடுக்குநாறிமலையில் அத்துமீறிய காவல்துறையினர்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு

வெடுக்குநாறிமலையில் அத்துமீறிய காவல்துறையினர்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு

நீதிமன்ற அனுமதி

இவ்வாறு கைது செய்து கொண்டு சென்ற போது சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை நடத்தி விலங்கிட்டு இழுத்துச் சென்றார்கள், இழுத்துச் செல்லப்பட்ட போது மரக்கட்டைகள் தாக்கி கால்களில் காயமும், கை விலங்குகள் இறுக்கியதால் கைகளில் காயங்களும் ஏற்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரின் அடாவடி : நிர்வாணமாக்கப்பட்ட பக்தர்கள் | Vedukkunari Kovil Issue Accusation Against Police

இதன்போது அவர்களில் ஒருவரின் வேட்டியை பலவந்தமாக களைந்து அரை நிர்வாணமான முறையில் கொண்டு சென்றனர், இதன்போது நெடுங்கேணி பொறுப்பதிகாரி வேட்டியை கொடுக்க வேண்டாம் எனக் கூறி இனவாதத்தோடு மிலேச்சத்தனமாக நடத்தியிருக்கிறார்.

ஏனையவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நீதிமன்ற அனுமதி இருந்தும் காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள்." என்றார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டர்களின் வேட்டிகளை களைந்து உள்ளாடைகளுடன் அழைத்து சென்றதை தாம் கண்டதாக ஆலய பக்தர்களும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?