முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 401 40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை:

 

40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை: கிழக்குத் தமிழர்கள் தொடர் போராட்டம்


40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை: கிழக்குத் தமிழர்கள் தொடர் போராட்டம் | Eastern Tamils Continued Struggle

Sri Lankan TamilsSL ProtestEastern Province
 2 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (மார்ச் 25) கல்முனை வடக்கு (உப) பிரதேச செயலகத்திற்கு முன்பாக, கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அம்பாறை மாவட்ட மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (மார்ச் 26) தொடர்வதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாத காரணத்தினால் அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.


கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென நிதி ஒதுக்கப்படுவதில்லை என போராட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சிவில் சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி

"கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு எதிரான அடக்குமுறைகளும், அத்துமீறல்களும், அரசியல் தலையீடுகளும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற அதேவேளை, இந்த முறை அம்பாறை மாவட்டத்திற்கான டிசிபி நிதி ஒதுக்கீட்டிலும் எங்களுடைய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு ஒரு சதமேனும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை: கிழக்குத் தமிழர்கள் தொடர் போராட்டம் | Eastern Tamils Continued Struggle

கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது 1993ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக ஒரு பிரதேச செயலகமான தரமுயர்த்தப்பட்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பல சிக்கல்கள் காணப்படுகின்றன."

அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் 1986ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன், 1993ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக, உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, அன்றைய காலப்பகுதியில் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அரச செயலாளராகப் பணியாற்றிய எஸ்.ஏ. ஒபதகே கல்முனை பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமது நிர்வாகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளதாக கல்முனை வடக்கு பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை: கிழக்குத் தமிழர்கள் தொடர் போராட்டம் | Eastern Tamils Continued Struggle

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் நிதி மற்றும் காணி அதிகாரங்களை இழந்து தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதியை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

300ற்கும் மேற்பட்ட கடிதங்கள்

இது தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு 300ற்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என சிவில் சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

“அம்பபாறை மாவட்ட செயலாளர் மற்றும் விடயத்திற்க பொறுப்பான அமைச்சரின் செயலாளருக்கும் 300ற்கும் மேற்பட்ட கடிதங்களை பொது அமைப்புகளாக நாம் எழுதியுள்ளபோதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை: கிழக்குத் தமிழர்கள் தொடர் போராட்டம் | Eastern Tamils Continued Struggle

இதுத் தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளரை பொது மக்கள் நேரடிாயாக சந்தித்து முறைப்பாடு அளித்த போதிலும் இந்த விடயத்தில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிவித்தத மாவட்ட செயலாளர் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர், செயலாளரிடம் பேசி தீர்வினைப் பெற்றுத்தருவதாக கூறி ஆறு மாதங்கள் கடந்துள்ளபோதிலும் இதுவரை உரிய தீர்வை பெற்றுத்தரவில்லை.”

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 2023 நவம்பர் 28ஆம் திகதி கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை கணக்காளர்கள் உள்ளிட்ட முக்கிய நியமனங்களை வழங்கி முழுமையான பிரதேச செயலகமாக மாற்றுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?