முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 945 தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிதேர்வாக இதை தமிழ் தலைவர்கள்பார்க்க வேண்டும்,

 

தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிதேர்வாக இதை தமிழ் தலைவர்கள்பார்க்க வேண்டும்,

இலங்கை தமிழரசுக்கட்சி தலைமைக்கான தேர்தல் : சிறீதரன் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு | Tna Election Sridharan Report For Eela Tamils Sl

 களத்தில் நிற்பர்கள் ஒருதர் கோமாளி உருதர் உளவாளி யாரை தேர்ந்து எடுப்பது இதுதான் இன்றயே குழப்பமான நிலை ஆனால் 14 வருடங்கள் சம்மந்தனோடுதுணையாகஇருந்து தமிழர்களின் தனி நாட்டுக்கோரிக்கைக்கும் மற்றும் அங்கே இனவளிப்பு நடந்தது அதனால் அந்த இராணுவம் தமிழர்களை பாதுகார்ப்பதற்கு தகுதியற்றது, என்பதை ஐக்கிய நாடுகளிற்குத் தொடர்ந்து வலி உறுதித்தி இருந்தால் கட்டிப்பாக வெளிநாட்டுப் பொறிமுறையுடனான கூடிய பாதுகாப்பு எமக்குக்கிடைத்துயிருக்கும் , இதை செய்வதற்கு தவறிய உளவாளியை மறந்தும் கூட பேனாவை வைத்து ஆதரவு வழங்க வேண்டாம், அடுத்தது கோமாளி இவர் சிறிதரன் அடிக்கடி கொள்கைமாறிக் கதைத்தாலும், இவரைத்தேர்வு செய்வதைதவிர வேறுவளியில்லையென நினைக்கின்றேன், எனவே இவரையே தேர்வு செய்யுமாறு அன்பு உருமையுடன் தமிழீழ மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்,


இலங்கை தமிழரசுக்கட்சி தலைமைக்கான தேர்தல் : சிறீதரன் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு

 By Shadhu Shanker 11 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை தெரிவிற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் சிவஞானம் சிறீதரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், தனக்கு வாக்குகளை வழங்குமாறும், தமிழரசுக் கட்சியின் தலைவராக அவரை தெரிவுசெய்யும் பட்சத்தில், ஈழத்தமிழர்களுக்கு தான் செய்யகூடிய விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது,

“ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் நானும் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுவது குறித்து தாங்களும் அறிவீர்கள்.


நாளை 2024.01.21 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் தங்களின் பெறுமதிமிக்க வாக்கினை எனக்கு வழங்கி, ஈழத்தமிழர்களால் மானசீகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக என்னைத் தெரிவுசெய்யும் பட்சத்தில், எமது மக்களின் அரசியல் உரித்துக்கோரிய தார்மீகப் போராட்டத்தில் எனது போக்கும், கட்சியின் இயங்குநிலையும் கீழ்வரும் கொள்கை நிலைப்பாடுகளுடன் கூடியதாக அமையும் என உறுதி கூறுகிறேன்.

ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதிசெய்வதற்கான முன்னகர்வுகள்

தமிழ்த்தேசிய இனப்பிரச்சினையென்பது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதையும், தமிழர் தேசத்தைத் தாங்கும் தூண்களாக உள்ள நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவையும் அழிக்கப்படுவதே.

இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என சிங்கள மக்கள் கருதுவதாலேயே இவ் அழிப்பு இடம்பெறுகிறது.

சிங்கள - பௌத்த சித்தாந்தமும், ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் அதற்கான அரச இயந்திரமும், இவ்வழிப்பு நடவடிக்கைகளில் பங்காற்றுகின்றன. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இவ்வழிப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.

இதற்கு கோட்பாட்டு அடிப்படையில் தேசம், இறைமை, சுயநிர்ணயம் என்பன ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். அரசியல் யாப்பு ரீதியாக வடக்கு - கிழக்கு இணைப்பு, சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேசமாக பங்குபற்றுவதற்கான பொறிமுறை, அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பன ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை தமிழரசுக்கட்சி தலைமைக்கான தேர்தல் : சிறீதரன் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு | Tna Election Sridharan Report For Eela Tamils Sl

இது தொடர்பாக சிங்கள தேசத்திற்கும் தமிழ்த் தேசத்திற்கும் இடையே சமூக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும். அதனடிப்படையில் கீழ்வரும் இலக்குகளை நோக்கியதாகவே எனது பயணம் அமையும் என்பதை தங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

சிறீதரனின் இலக்குகள்

 தேசிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புதல்.

 புவிசார் அரசியலில் பங்காளிகளாகுதல்.

 சமூகமாற்ற அரசியலை முன்னெடுத்தல்.

 அடிப்படைச் சக்திகள், சேமிப்புச்சக்திகள், நட்புச் சக்திகளை அணிதிரட்டுதல்.

அடிப்படைச் சக்திகள் - தாயக மக்களும் அதன் நீட்சியாகவுள்ள புலம்பெயர் உறவுகளும்.

சேமிப்புச் சக்திகள் - மலையக மக்கள், தமிழக மக்கள் உட்பட உலகவாழ் தமிழ் மக்கள். நட்புச் சக்திகள் - சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகம் வாழ் முற்போக்கு ஜனநாயகச் சக்திகள்.

 மக்கள் பங்கேற்பு அரசியலை வலுப்படுத்தல்.

 சர்வதேச சமூகத்தை எமக்குச் சார்பாகத் திரட்டுதல்.

 ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு சர்வதேசப் பாதுகாப்புடன் கூடிய இடைக்கால நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தல்.

 தமிழ் மக்களுக்கென அதிகாரமையம் ஒன்றைக் கட்டியெழுப்புதல்.

 கிழக்கைப் பாதுகாப்பதற்கு தனியான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல்.

 கடற்றொழில், விவசாயம், வணிகம், கைத்தொழில், அரசு, நிர்வாகம், கல்வி போன்ற துறைகளுக்கு துறைசார் நிபுணர்கள், அனுபவசாலிகள், ஆற்றலாளர்களை உள்ளடக்கிய சிந்தனை வங்கிகளை உருவாக்கி சூழலுக்கேற்ற தீர்மானங்களை நிறைவேற்றுதலும் செயற்படுத்துதலும்.

 பலமுனைகளிலும், கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன, மத, கலாசார, பண்பாட்டு ரீதியாக வலிந்து மேற்கொள்ளப்படும் சகல ஆக்கிரமிப்புகளையும் - துறைசார் அடக்குமுறைகளையும் பதிவுசெய்து, உடனடி எதிர்ப்புப் பொறிமுறைகளைக் கையாளக்கூடிய மக்கள் குறைகேள் சர்வதேச கண்காணிப்பு மையங்களை வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியே நிறுவுதல்.

 தமிழினத்தின் கலாசார, பண்பாட்டு மரபுரிமைகளையும், அடையாளங்களையும் நிபுணத்துவ பங்குபற்றலுடன் நிறுவி, நெறிப்படுத்தல்.

 ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் உள்ள சமூக அமைப்புகளின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளுக்கு வழிவகை செய்தல்.

கட்சியின் மேம்பாட்டுத் திட்டங்கள்

 தொண்டரிலிருந்து தலைமை வரை கட்டிறுக்கமான நிருவாக நடைமுறைகளையும், உட்கட்சி சனநாயகத்தையும் வலுவுள்ளதாக்கும் வகையில் கட்சியின் யாப்பு விதிகளை நேர்த்தியாக்குதல்.

 கட்சியின் இலக்குக் குறித்த தெளிவும் வினைத்திறனும் மிக்க நவீன ஊடகப்பரப்பைக் கட்டமைத்தல்.

 கட்சியின் தலைமைப் பணிமனை, மாவட்டப் பணிமனை என்பவற்றை முறையான கட்டமைப்புகளுடன் இயங்கு நிலையில் வைத்திருத்தல்.

 கட்சிக்கான சட்டரீதியான நிதியீட்டங்களை உறுதிப்படுத்தலும் கையாளலும்.

இலங்கை தமிழரசுக்கட்சி தலைமைக்கான தேர்தல் : சிறீதரன் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு | Tna Election Sridharan Report For Eela Tamils Sl

 தமிழ்த்தேசியக் கொள்கை நிலைப்பாட்டோடு இயங்கும் ஏனைய தமிழத் தேசியக் கட்சிகளுடன் கொள்கைவழிப்பட்ட அரசியல் உறவுநிலையைப் பேணுதல். மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்தல்.

 அரசுடனும் ஏனைய அமைப்புக்களுடனுமான பேச்சுவார்த்தைகளின் போது வெளிப்படைத் தன்மையைப் பேணுதல்.

 கட்சியின் நிருவாகக்கட்டமைப்பில் இளையோர்களை உட்சேர்த்தல்.

 முன்னாள் போராளிகளினுடைய அரசியல் மற்றும் தேசக்கட்டுமான அனுபவங்களை உள்வாங்கி, கட்சியின் நகர்வுகளில் அவர்களின் பங்கேற்பினையும் உறுதிப்படுத்துதல்.

 எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளும் ஒவ்வொரு தேர்தல்களிலும் தனிநபர்களின் சுயவிருப்புக்கேற்ப வேட்பாளர்களை நியமிக்காது, பொருத்தமான வேட்பாளர்களை நிறுத்துவதற்காக வெளிப்படையாகச் செயற்படல்.

 நிலத்திலும், புலத்திலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் இலக்குகளையும் அடைவதற்கான பொது வேலைத்திட்டத்திற்குரிய பொறிமுறையை உருவாக்கி நடைமுறைப்படுத்தல்.” என தெரிவித்துள்ளார்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?