முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 508 தற்காலிக வீசா அகதிகள் நிரந்திர வீசாவிற்கு விண்ணப்பிக்கலாம்!

தற்காலிக வீசா அகதிகள் நிரந்திர வீசாவிற்கு விண்ணப்பிக்கலாம்!!
தற்காலிக விசாவில் உள்ள 19,000 பேர் திங்கட்கிழமை முதல் நிரந்தர விசாவிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று Albanese அரசு அறிவித்துள்ளது. Immigration Minister Andrew Giles Immigration Minister Andrew Giles said it made “no sense” to keep people who worked and paid taxes “in limbo”. Source: AAP / Lukas Coch ஆளும் லேபர் அரசு அதன் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியிருப்பதன் மூலம் நாட்டில் நிச்சயமற்ற நிலையில் தற்காலிக வீசாவில் வாழும் ஆயிரக்கணக்கான அகதிகள் நாட்டில் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். திங்கட்கிழமை முதல், தற்காலிக பாதுகாப்பு வீசாவில் (TPVகள்) அல்லது Safe Haven Enterprise வீசாக்களில் (SHEVs) உள்ள சுமார் 19,000 பேர் நிரந்தர வீசாக்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பை பெடரல் அரசு ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டது. தற்காலிக வீசாவில் உள்ள பல்லாயிரம் அகதிகள் வேலை செய்து வரி செலுத்தி வரும் நிலையில் அவர்கள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதில் அர்த்தமில்லை என்று குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்தார். Advertisement READ MORE நிரந்தர வதிவிட வீசாவில் உள்ள அகதிகளின் குடும்பங்களை இணைக்கும் அரசின் புதிய அறிவிப்பு!! இந்த மாற்றம் 2013 இன் பிற்பகுதியில் Operation Sovereign Borders என்ற எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு வந்த அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும் அல்லது 14 பிப்ரவரி 2023க்கு முன் TPV அல்லது SHEV வீசா வைத்திருப்பவர்கள் அல்லது விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நிரந்தர விசா வழங்கப்பட்டவர்கள் Centrelink கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிக்க முடியும், NDISஐ அணுகவும் மற்றும் உயர்கல்வி உதவிக்காகவும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறவும் அனுமதிக்கப்படுவார்கள் மேலும் தங்களின் குடும்ப உறுப்பினர்களை sponsor செய்து ஆஸ்திரேலியா அழைத்து வர முடியும். தற்காலிக வீசா ரத்து செய்யப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட சுமார் 2,500 பேர் நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; அவர்கள் தானாக முன்வந்து ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று பெடரல் அரசு தெரிவித்துள்ளது. READ MORE புகலிட விண்ணப்பம் பரிசீலனையின் காலதாமதம் ஏற்படுத்தும் விளைவுகள் Operation Sovereign Borders என்ற எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும் புகலிடம் தேடி படகுகள் கடலில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படும் என்று உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார். படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து நிரந்தர வீசாவில் உள்ள அகதிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இங்கு அழைத்து வர சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருந்த கட்டுப்பாட்டை ஏற்கனவே நீக்கி அறிவித்த பெடரல் அரசு தற்போது தற்காலிக வீசாவில் உள்ள அகதிகள் நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்ற இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?