முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 535 12 மாதத்திற்குள் தற்காலிக விசாக்கள் நிரந்தர விசாக்களாக மாற்றப்படும் அதற்கான பணம் அரசு வழங்கியுள்ளது,

புதிய Resolution of Status Visa என்றால் என்ன? அதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?
பிப்ரவரி 12ஆம் தேதி பெடரல் அரசு தற்காலிக வீசாவில் உள்ளவர்கள் நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் (TPV) அல்லது Safe Haven Enterprise Visas (SHEV) - இல் வசிப்பவர்களுக்கு பல கேள்விகள் இருக்கலாம். இப்புதிய Resolution of Status Visa என்றால் என்ன? அதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? இதன் பரிசீலனை நடைமுறை என்ன? அதற்கான பதிலை தொடர்ந்து பார்க்கலாம். AUSTRALIAN PASSPORT STOCK An Australian passport is pictured next to an entry visa to Papua New Guinea in Brisbane, Thursday, July 25, 2013. (AAP Image/Dan Peled) NO ARCHIVING Source: AAP / DAN PELED/AAPIMAGE TPV மற்றும் SHEV வீசாக்களில் உள்ள சுமார் 19,000 அகதிகளுக்கு நிரந்தரம் செய்வதற்கான புதிய பாதையை பெடரல் அரசு அறிவித்துள்ளது. அவர்கள் இப்போது நிரந்தர துணைப்பிரிவு 851 Resolution of Status (RoS) விசாவிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் சிலர் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அதிக நேரம் காத்திருக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது. TPV மற்றும் SHEV வீசாக்கள் வைத்திருக்கும் சுமார் 19,000 அகதிகளின் தலைவிதி அவர்களை RoS விசாவிற்கு விண்ணப்பிக்க அரசு அனுமதித்த பிறகு விரைவில் தீர்மானிக்கப்படக்கூடும். இந்த அகதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஈரான் (6,513 பேர்) மற்றும் ஆப்கானிஸ்தான் (4,573 பேர்) நாடுகளை சேர்ந்தவர்கள்.
தற்காலிக வீசா அகதிகள் நிரந்திர வீசாவிற்கு விண்ணப்பிக்கலாம்!! Advertisement TPV and SHEV holders_2.png Credit: Department of Home Affairs பாதுகாப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ள சுமார் 2,500 பேர் தானாக விரும்பி முன்வந்து ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று பெடரல் அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் இந்த புதிய RoS வீசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும் சிலர் தங்களின் பாதுகாப்பு கோரிக்கைகளை பரிசீலனைக்கான சமர்ப்பித்து விட்டு அதன் முடிவிற்காக Bridging வீசாவில் காத்துள்ளனர். எனவே இப்போது விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள், நிரந்தர RoS வீசாவை பெறுவதற்கான நடைமுறை என்ன? எப்போது, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? நிரந்தர வீசாவிற்கு தகுதியானவர்களை இரண்டு முக்கிய குழுக்களாக பிரித்து படிப்படியாக பரிசீலிக்கவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1. விண்ணப்பம் பரிசீலனைக்கு சமர்பித்துள்ளவர்கள்: காலாவதியான TPV/SHEV வீசாக்களை புதுப்பிக்க விண்ணப்பித்தவர்கள் அல்லது முதல்முறையாக TPV/SHEV வீசாவிற்கு விண்ணப்பித்தவர்களும் அடங்குவர். இந்த நபர்கள் RoS விசாவிற்கு விண்ணப்பிக்கவோ அல்லது உள்துறை அமைச்சகத்திற்கு கூடுதல் தகவலை வழங்கவோ தேவையில்லை. கூடுதல் தகவல் தேவை என குடிவரவு திணைக்களம் கேட்கும்பட்சத்தில் அல்லது தொடர்பு விவரங்கள் மாறியிருந்தால் மட்டுமே குடிவரவு திணைக்களத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அவர்களின் தற்போதைய விண்ணப்பங்கள் தானாகவே RoS விண்ணப்பங்களாக மாற்றப்படும். 2. விண்ணப்பம் எதுவும் பரிசீலனையில் இல்லாதவர்கள்: செல்லுபடியாகும் TPVகள் அல்லது SHEV வீசாவில் உள்ளவர்கள் உள்துறை அமைச்சகம் அவர்களை விண்ணப்பிக்க "அழைக்கும்" வரை இந்த நபர்கள் காத்திருக்க வேண்டும். இந்த அழைப்பிதழ்கள் மார்ச் மாத இறுதிக்குள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு திணைக்களம் அனுப்பிய அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற பின், அவர்கள் ImmiAccount மூலம் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். "பாதிக்கப்படக்கூடியவர்கள்" மற்றும் "முன்னுரிமையுடையவர்கள்" ஆகியோர் அழைப்புகளுக்காகக் காத்திருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அழைப்பிதழ் அனுப்பி கட்டம் கட்டமாக பரிசீலிப்பதன் மூலம் விண்ணப்பங்கள் காலத்தாமதமின்றி பரிசீலிக்கப்படும் என்றும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கும் ஆதரவளிப்பதையும் உறுதி செய்யும் என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் SBS Dari - இடம் தெரிவித்தார். READ MORE
தடுப்பிலிருந்து 163 பேர் விடுதலை - குடிவரவு சட்டத்தின் ஓட்டையை மூட அரசு விரைகிறது!! விண்ணப்பங்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன? விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பு கோரிக்கைகள் மீள்மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை மற்றும் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார். இருப்பினும், அவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியம், தேசிய பாதுகாப்பு மற்றும் குணநலன்கள் உட்பட RoS வீசாவிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விண்ணப்பதாரர்கள் தங்கள் உடல்நலப் பதிவுகளை வழங்குமாறு குடிவரவு திணைக்களம் கேட்காது என்றும் ஏற்கனவே உள்ள தரவுகள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு விண்ணப்பதாரர்களை போலீஸ் பரிசோதனை சான்றிதழை வழங்குமாறும் கூறாது போலீசிடமிருந்து நேரடியாக சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படும். எவ்வளவு காலம் எடுக்கும்? பெரும்பாலான TPV மற்றும் SHEV வீசாவில் உள்ளவர்களின் RoS வீசா பரிசீலனை முடிவு 12 மாதங்களுக்குள் வழங்கப்படும் என அரசு எதிர்பார்க்கிறது. உதவி எங்கே கிடைக்கும்? RoS விண்ணப்பதாரர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க அரசு இரண்டு ஆண்டுகளில் $9.4 மில்லியன் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிரதேசத்தில் உள்ள சட்ட சேவை வழங்குநர்களுக்கு நிதி வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணங்கள் எதையும் அரசு வசூலிக்காது, மேலும் விண்ணப்பதாரர்களை ஏமாற்ற முயற்சிக்கும் நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு எச்சரித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?