முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 583 பிரபாகரன் மகள் லண்டனிலாதமிழர்கள் விளிப்பாக இருக்க வேண்டும்?

லண்டனில் உள்ள துவாரகா உண்மையில் பிரபாகரனின் மகளா... விளக்கமளித்த தமிழ் எம்.பி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா லண்டனில் உள்ளதாக வெளியான கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகப் பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாகத் அவர் தெரிவித்துள்ளார். சுவிஸ்லாந்தில் நிதி சேகரிப்பு
இந்த அறிவிப்பு வெறுமனே நிதி கேரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிதி சேகரிப்பு சுவிஸ்லாந்து நாட்டில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆனால் அது முறியடிக்கப்பட்டுள்ளதாகச் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பிரபாகரனின் மகள் துவாரகா லண்டனில் உள்ளதாகவும் அங்கு வந்தால் அவரை பார்க்கமுடியுமெனக் கூறப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் உண்மையான தலைவரின் மகளா என்பதைச் சோதனை செய்வதற்காகக் கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்த நிலையில் அவர் போலியானவர் என்பது தெரியவந்துள்ளது. பிரபாகரனின் மகள் லண்டனில் உள்ள துவாரகா உண்மையில் பிரபாகரனின் மகளா... விளக்கமளித்த தமிழ் எம்.பி | Ltte Leader Prabhakaran Daughter Thuvaraka Alive தன்னுடைய அனுபத்திலும் தனக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த அறிவிப்பு நிதி சேகரிப்பிற்காகவே வெளியிடப்பட்டது. தனது குடும்பத்தையே ஒரு இனத்திற்காக அர்ப்பணித்த தம்பி பிரபாகரன் தொடர்பில் இவ்வாறு பொது வெளியில் பொய்யான கருத்துகளை வெளியிடுவது ஒரு போராட்டத்தை மலினப்படுத்தும் செயல் என்றும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?