முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 578 உன்மை தமிழர்களிற்குத்தெரியும்

சிங்கள அரசிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும் பெற்று தரப்போவதில்லை
சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத் தராது என காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் போராட்டம் ஆரம்பித்து 2200வது நாளான இன்று வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், "இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம் தொடர்கிறது. வடக்கு - கிழக்கு இணைப்பு சிங்கள அரசிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும் பெற்று தரப்போவதில்லை | Ltte Leader India Wrong Way Srilankan Tamils இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வடக்கு - கிழக்கு இணைப்பு, குருந்தூர் மலை, உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை அனைத்தும் இலங்கையின் நீதித்துறை தமிழர்களுக்கு எதிரானது என்பதை சுட்டிக் காட்டுகின்றன. ஒருவேளை இந்த இலங்கையின் நீதித்துறை சிங்களவர்களுக்குப் பயன்படலாம். வடக்கு கிழக்கில் தமிழ் நீதியரசர்களின் தீர்மானம் எதுவாக இருந்தாலும், அரசாங்கமோ, கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றங்களோ, உச்ச நீதிமன்றமோ அதனை மதிக்காது நிராகரித்துவிடும். 1983 சிங்களப் படுகொலைக்குப் பின்னர், 1984 இல் அமெரிக்கா பின்வரும் மதிப்பீட்டைச் செய்தது: "தமிழ் கோரிக்கைகள் அநேகமாக ஒரு கூட்டாட்சி கட்டமைப்பின் மூலம் திருப்தி அடையும், அது தமிழர்கள் பெரும்பான்மையான மக்களை உள்ளடக்கிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மீதான கட்டுப்பாட்டை உத்தரவாதம் செய்யும்" என்கிறது. "பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு தன்னாட்சி தாயகம் வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர்" என்று வாஷிங்டன் நம்புவதாக அந்த ஆவணம் கருத்து தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு தமிழினப் படுகொலை மற்றும் இனப்படுகொலைக்குப் பிறகு, அமெரிக்கக் கருத்து, கொன் பெட்ரலிசம் அல்லது முழுத் தமிழ் இறையாண்மைக்கு மேலும் சென்றிருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அமெரிக்காவின் உதவி சிங்கள அரசிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும் பெற்று தரப்போவதில்லை | Ltte Leader India Wrong Way Srilankan Tamils எனவே தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவியை தமிழர்களாகிய நாம் அனைவரும் கோர வேண்டும். சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத் தரும் என்று நம்ப வேண்டாம். அவர்கள் தமிழர்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள். ரஷ்யாவின் புடின் மற்றும் அவரது தளபதிகளால் உக்ரைன்கள் மீதான கொடூரமான கொலைகளைக் கண்டிக்காமல் ஐ.நா வாக்கெடுப்பில் நடுநிலை வகித்ததால் இந்தியா தனது மனித உரிமை அந்தஸ்தை இழந்தது. ஐ.நா.வின் வாக்கெடுப்புக்குப் பிறகு இந்தியா உலகளவில் தனது செல்வாக்கை இழந்தது. நமது இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவிக்காக பிரார்த்தனை செய்வோம்" என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?