முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 550 ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்க அதிபர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை நெருங்குகிறது. 10 மணி நேரம் பயணம் ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் பெப்ரவரி .20,21, 22-ம் திகதிகளில் சுற்றுப் பயணம் செய்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர் உக்ரைன் செல்வாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அமெரிக்க அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ சிறப்பு சிறப்பு விமானத்தில் வாஷிங்டனில் இருந்து போலந்துக்கு புறப்பட்டார். போலந்து தலைநகர் வார்சாவில் அவரது விமானம் தரையிறங்கியது. அங்கிருந்து சிறப்பு தொடருந்து மூலம் 10 மணி நேரம் பயணம் செய்து, நேற்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் வந்தடைந்தார். அமெரிக்க ஏவுகணைகள் ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President அவரது பயணம்மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. விமானத்தில் பயணம்செய்தால், ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் புகையிரதத்தில் அவர் உக்ரைன் சென்றதாக கூறப்பட்டது. ஒருவேளை, புகையிரதம் மீது ரஷ்ய இராணுவம் திடீர்தாக்குதல் தொடுத்தால் அதை முறியடிக்க போலந்து, உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
கீவ் தொடருந்து நிலையத்தில் இறங்கிய அதிபர் ஜோ பைடன், அங்கிருந்து சிறப்பு வாகனத்தில் மேரின்ஸ்கி அரண்மனைக்கு வந்தார். அவரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். ஜோ பைடன் ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது, ''ஓராண்டுக்கு முன்பு உக்ரைன் மீதுதாக்குதல் தொடங்கப்பட்டது. அந்த நாடு வீழ்ந்துவிடும் என்று சிலர் கூறினர்.ஆனால் ஓராண்டாக உக்ரைன் கம்பீரமாக எழுந்து நின்று போராடுகிறது. அமெரிக்கா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் உக்ரைனுக்கு துணை நிற்கிறது. உக்ரைன் இராணுவத்துக்கு அதிநவீன ஹிமர் ஏவுகணைகள், கவச வாகனங்கள், வான்பரப்பை கண்காணிக்க அதிநவீன ரேடார்கள் வழங்கப்படும். புதினின் கனவு தகர்ந்துவிட்டது ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President கூடுதலாக 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவோம். உக்ரைன் மக்களின் நலனுக்காக அமெரிக்க வரவுசெலவு திட்டத்தில் தாராளமாக நிதி ஒதுக்கப்படுகிறது. உலக வரைபடத்தில் இருந்து உக்ரைனை அழித்துவிட வேண்டும் என்று ரஷ்யா விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. ரஷ்ய அதிபர் புதினின் கனவு தகர்ந்துவிட்டது. ரஷ்ய இராணுவம் ஆக்கிரமித்து வைத்த பகுதிகளில் பாதி மீட்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஓராண்டுக்கு முன்பு உக்ரைன் மீது போர் தொடுத்தார். ‘உக்ரைன் பலவீனமாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளிடம் ஒற்றுமை கிடையாது. எனவே போரில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்’ என்று புதின் கனவு கண்டார். புதின் என்ன நினைக்கிறார் ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President தனது கணிப்பு மாபெரும் தவறு என்பதை இப்போது உணர்ந்திருப்பார். புதின் என்ன நினைக்கிறார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். இப்போது ரஷ்யாவில் இருந்து திறமையான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். அவர்கள் போருக்கு அஞ்சி ஓடவில்லை. ரஷ்யாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதால், தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தப்பிச் செல்கின்றனர். அடுத்த ஒரு வாரத்தில் ரஷ்யாவுடன் தொடர்புடைய அமைப்புகள், நிறுவனங்கள் மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.'' என தெரிவித்தார். ஆயுதங்களை வழங்குவதாக உறுதி ஜோ பைடன் திடீர் பயணம் - உக்ரைன் பகுதிகளில் அமெரிக்க ஏவுகணைகள் தயார் நிலையில்..! | Joe Biden Meets With Ukraine President இதன் போது கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி , ‘‘அமெரிக்க அதிபர் பைடனின் வருகை உக்ரைன் மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. எங்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதாக அவர் உறுதி அளித்ததற்கு நன்றி’’ என்றார். உக்ரைன் தலைநகர் கீவில் சுமார் 5 மணி நேரம் தங்கியிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று மாலை தொடருந்து மூலம் போலந்துக்கு சென்றார்.'' என தெரிவித்தார்.
ஜோ பைடனின் உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய தரப்புக்கு அமெரிக்க அரசு தரப்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதனால், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ரஷ்ய இராணுவம் நேற்று எவ்வித தாக்குதலும் நடத்தவில்லை என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?