முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b775

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. குறித்த சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு பூவரசம் குழை வெட்டுவதற்காக கிணற்றுக்கட்டில் ஏறி நின்று வேளையில் தவறி விழுந்துள்ளார். உடனயாக அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

TAMIL Eelam news b774

கோட்டாபயவின் உரை வெறும் குப்பை! பஸிலிடம் சம்பந்தன் பாய்ச்சல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள் என ஜனாதிபதியின் சகோதரரும் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் சீறி விழுந்து கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். 9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் தகவல் வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. மேலும் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:- "ஜனாதிபதியின் பேச்சை செவிமடுத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதையொட்டி இன்று பெரும் கோபம் கொண்டார். பேச்சு முடிந்த கையோடே எழுந்து நாடாளுமன்றில் பகிரங்கமாகத் தம் எதிர்ப்பை பதிவு செய்ய அவர் விரும்பினார். அதற்காக எழுந்தார். எனினும், யோசித்தவர், நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நடக்கக் கூடாது என்பதற்காக அப்படி கருத

TAMIL Eelam news b773

சீனாவின் தளமாக மாறிவிடுமா கொழும்பு துறைமுக நகரம்? இந்தியாவுக்கு என்ன சிக்கல்? கொழும்பு நகரின் கடற் பகுதியில் பளபளப்பாக எழும்பியிருக்கும் துறைமுக நகரை "பொருளாதார மாற்றத்துக்கான காரணி" என்று அதிகாரிகள் வர்ணிக்கிறார்கள். பரந்த மணல் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் சர்வதேச நிதி மையம், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஒரு மெரினா ஆகியவை உருவாகப் போகின்றன. அதன் உருவாக்கத்துக்கு பிறகு இது ஒரு துபாய், மொனாக்கோ அல்லது ஹாங்காங் உடன் ஒப்பிடும் அளவிற்கு இருக்கும். "இந்தப் பகுதியால் இலங்கை வரைபடம் மீண்டும் வரையப்படலாம். உலகத்தரம் வாய்ந்த தகுதியை அடையும், உதாரணமாக துபாய் அல்லது சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடப்படலாம்" என்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர் சாலிய விக்ரமசூரிய பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், உண்மையில் இலங்கைக்கு இது எந்தளவுக்கு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 665 ஏக்கர் (2.6 சதுர கிமீ) புதிய நிலப்பரப்பு உருவாக்குவதற்கு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது சீன

TAMIL Eelam news b772

அனர்த்தமா அல்லது சதியாக ?மட்டக்களப்பு கடல் பகுதியில் காணாமல் போன தந்தையும், மகனும் சடலங்களாக மீட்பு மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இவர்கள் இருவரது சடலங்களும் காயன்கேணி கடல் பரப்பில் இருந்து சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. கண்ணகி அம்மன் கோவில் வீதி காயான்கேணியைச் சேர்ந்த மு.திசநாயகம்(வயது 56) என்ற தந்தையும் அகிலவாசன் (21 வயது) மகனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை வழக்கம் போல் இருவரும் இயந்திரப் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கடலுக்குச் சென்றவர்கள் மறுநாள் கரையை திரும்பாமல் நேரமாகியதால் சந்தேகம் கொண்டு உறவினர்கள் கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர்கள் சென்ற படகு தனிமையில் கடல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக வாகரை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பின்னர் பிரதேசத்தின் உள்ளுர்

TAMIL Eelam newsb771

இந்தியர்கள் என பெருமையாக சொல்லும் தமிழக மக்களிற்கு சேறு பூசிய இந்தியா அரசு குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு இந்தியக் குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் 72ஆவது குடியரசு தினவிழா எதிர்வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் டில்லியில் 1.25 லட்சம் பார்வையாளர்களுடன் குடியரசு தின விழா நடைபெறுவது வழக்கமாக காணப்படுகின்றது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, 25 ஆயிரம் பேர் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் இந்தாண்டும் டில்லியில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் கொண்ட அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கமாக காணப்படுகின்றது. அந்த வகையில், இந்தாண்டு வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கி

TAMIL Eelam news b770

தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிய ஐம்பதினாயிரம் போராளிகள் மற்றும் தலைவன் உட்பட அனைவரின் தியாகங்களையும் அவமதித்து இந்தியர் இலங்ககையர்களிடம் தமிழீழத்தை தாறை வார்ப்பதற்கான ஒப்பந்தம் நாளை கையளிப்பு. கோமாளி சம்மந்தனின் தலைமையில் ஒநாய்கள் சம்மதம் தமிழர் தேசம் துக்க தினம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிப்பதற்காகத் தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் இதன்போது கையளிக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு இதன்போது, இந்தியத் தூதரக தரப்பால் கால எல்லை

TAMIL Eelam news b769

மோசமான செயலில் ஈடுபட்ட இளைஞரொருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் புதிய கொலனி பகுதியில் 13 அகவை சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் கைதான இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாங்குளம் பகுதியில் உள்ள டயர் கடை ஒன்றில் வேலை செய்வதற்காகத் திருகோணமலையினை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைதேடி வந்துள்ளார். இவர் தங்குவதற்காக மாங்குளம் புதிய கொலனி பகுதியில் கிராம மட்ட அமைப்புக்களின் பரிந்துரையுடன் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், திருகோணமலை - மூதூர் பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவன் அதே பிரதேசத்தினை சேர்ந்த 13 அகவை சிறுமி ஒருவரை அழைத்து வந்து சுமார் ஒரு மாதகாலமாக குறித்த டயர்க்கடையில் வேலை செய்த இளைஞர் பெற்றுக்கொண்ட வாடகை வீட்டில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த சிறுமி தொடர்பிலான தகவல் புதிய கொலனி பகுதியில் கிராமத்தில் அலசல் புரசலாகப் பேசப்பட்டு சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளமையினை தொடர்ந்து சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டி