முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 570 மிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

  தமிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்  By Dhayani   an hour ago             Report விளம்பரம் இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு குழந்தைகளை கடத்தி செல்லும் ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 76 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  17 இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியதன் மூலம் அவர் மனித கடத்தல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவின் இடர் மதிப்பீட்டு பிரிவிற்கு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். உலகில் இலங்கையர்களை போன்று நல்லவர்கள் இல்லை! கொத்து ரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி நெகிழ்ச்சி மலேசிய குடிவரவுத்திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிப்பு அதன்படி, இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் இடர் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் உன்னிப்பாகக் க

f 569 அமெரிக்காவில் நடந்த கோர விபத்தில் நால்வர் பலி

  அமெரிக்காவில் நடந்த கோர விபத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நால்வர் பலி  By K. S. Raj   6 hours ago             Report விளம்பரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில்(California) பிளசன்டன் பகுதியில் ஸ்டோனிரிட்ஜ் டிரைவ் புட்ஹில் வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று முன்தினம்(26.04.2024) இடம்பெற்றுள்ளது. மாலைதீவுக்குள் மீண்டும் நுழைந்த சீன உளவுக்கப்பல் மேலதிக விசாரணைகள் இந்தியா- கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தருண் ஜார்ஜ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கார் முற்றிலுமாக நொறுங்கியிருப்பதால் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதனடிப்படையில் பிளசன்டன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

f 568 வெளிநாடொன்றில் டிக் டாக் பிரபலம் சுட்டுக்கொலை

  வெளிநாடொன்றில் டிக் டாக் பிரபலம் சுட்டுக்கொலை  By Chandramathi   35 minutes ago             Report விளம்பரம் டிக் டாக்கில்(TikTok) பிரபலமான பெண்ணொருவர் ஈராக்கில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கை குறித்த பெண்ணை ஈராக்கில்(Iraq) உள்ள அவரது வீட்டிற்கு அருகில் உந்துருளியில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தப்பியோடி விட்டதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஈராக் பாதுகாப்பு படையினர் ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

f 567மகிந்த - கோட்டாபய போல் ரணிலும் தமிழர்களின் எதிரி:

  மகிந்த - கோட்டாபய போல் ரணிலும் தமிழர்களின் எதிரி: லக்ஷ்மன் கிரியெல்ல சாடல்  By Dilakshan   3 hours ago             விளம்பரம் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைப் போல் ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களின் எதிரி என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் கூறியுள்ளார். அத்தோடு, எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு எதிராகவே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி சாராத பொது வேட்பாளராக ரணில்: ரவி கருணாநாயக்க நம்பிக்கை அரசியல் தீர்வு அதிபர் தேர்தலில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வெற்றியடைவார் என்று நம்பிக்கை வெளியிட்ட கிரியெல்ல, சஜித்தின் ஆட்சியில் அரசியல் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார். சஜித் பிரேமதாஸ எப்போதும் மக்கள் பக்கமே நிற்பார் என்றும், அவர்

f 566 குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தவறியும் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்

  குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தவறியும் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்  By Sahana   4 hours ago             விளம்பரம் நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலனும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் குடல் ஆரோக்கியத்தை முறையாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள் நமது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மனநலனில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்முடைய வயிற்றின் செயல்பாட்டை மிக மோசமாக பாதிக்கின்றன. அவ்வாறான உணவுகள் குறித்து பார்ப்போம். பதப்படுத்தப்பட்ட உணவுகள்  பதப்படுத்தப்பட உணவுகள் சாப்பிடுவதற்கு எளிதாகவும் சுவையாகவும் இருந்தாலும், அதில் பல சேர்க்கைப் பொருட்கள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் ஆகியவை உள்ளன. இவை நம் குடலில் உள்ள நுண்ணுயிரின் சமநிலையை பாதித்து செரிமானக் கோளறுகளையும் வீக்கத்தையும் உண்டாக்குகிறது. ஆகையால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் ஸ்னாக்ஸ்களை கூடுமானவரை தவிர்க்கவும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை  நாம் சாப்பிடும் பல வகையான பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர்பான்ங்களில் சுத்திகரிக்கப்ப