முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 874

 கொரோனா: இந்தியாவிலிருந்து மேலும் 165 பேர் ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டனர்! இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் பேரவலத்திற்குள் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையின்கீழ், இரண்டாவது தொகுதி ஆஸ்திரேலியர்கள் சிறப்பு விமானம் மூலம் டார்வினை வந்தடைந்துள்ளனர். கடந்த வாரம் முதற்கட்டமாக சுமார் 78 பேர் சிறப்பு விமானம் மூலம் டார்வின் அழைத்துவரப்பட்டிருந்தநிலையில் இன்று இரண்டாவது விமானம் மூலம் சுமார் 165 பயணிகள் டார்வின் RAAF base-ஐ வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக Howard Springs தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் சிக்கியிருந்த ஆஸ்திரேலியர்களில் 165 பேரை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் ஆஸ்திரேலியா வந்தடைந்தது. திட்டமிட்டபடி அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர், எவரும் திருப்பி அனுப்பப்டவில்லை. இந்தியாவிலிருந்து மேலும் பல ஆஸ்திரேலியர்கள் ஜுன் 4ம் திகதிக்கு முன்னர் ஆஸ்திரேலியா வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சிக்கியுள்ளவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது சிறப்பு விமானத்தி

TAMIL Eelam news 873

 கோவிட் பேரிடர் கால நிதியாக ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு 55 லட்சம் டொலர்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார். இந்து சமூத்திர பிராந்திய நாடுகளில் பரவலடைந்துள்ள கோவிட் தொற்றினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலிய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியின் ஒரு அங்கமாக இந்த உதவி வழங்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. படகுப் பயணங்களை முறியடிப்பதற்கு இலங்கைக்கு ட்ரோன்களை வழங்கியுள்ள ஆஸ்திரேலியா! கோவிட் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு ஆஸ்திரேலியா புதிதாக அறிவித்துள்ள 55 லட்சம் டொலர்களுடன் மொத்தம் ஒரு கோடி 17 லட்சம் டொலர்களை வழங்கியுள்ளது. கோவிட் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கை அதனை எதிர்த்து போராடி பாதுகாப்பான சூழலை மீளக்கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலியா எப்போதும் துணை நிற்கும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ள இந்த புதிய நிதி அதன் ஒரு அங்கமே எனவும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் David Holly தெரிவித்துள்ளார். இதுதவிர நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலிய அரசு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் டொலர்களை கோவிட் ப

TAMIL Eelam news 872

 தமிழருக்கு தனி ஈழத்தை வழங்க எதிர்ப்பது ஏன்?? கேட்கிறார் ராஜித  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. மாறாக தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே எதிர்க்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , தமிழ் ஈழத்திற்கும் நாடு பிளவடைவதற்கும் எதிரானவர்கள் என்று பாரியளவில் கூச்சலிட்டவர்கள் தான் இன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவளித்துள்ளனர். ஒரே நாடு ஒரே சட்டம் என்றல்லவா கூறினார்கள்? இன்று ஒரே நாடு ஒரே சட்டம் எங்கிருக்கிறது ? இந்த வலயத்திற்கு ஒரு நீதியும் எமது வலயத்திற்கு ஒரு நீதியுமே காணப்படுகிறது. இதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் சமஷ்டி அதிகாரத்தை விட அதிகமானதாகும். இந்த வலயம் தனி இராச்சியமொன்றாகும். இது தனி ஈழமாகும். இதனை தனி ஈழமாகக் குறிப்பிடுவதற்கு தற்ப

TAMIL Eelam news 871

 உரப்பைக்குள் மயக்க நிலையிலிருந்த இளைஞன் மீட்பு உரப்பையில் மயக்க நிலையில் காணப்பட்ட இளைஞன் ஒருவர் காலை மீட்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தம்புள்ளை நகரிலுள்ள கடை ஒன்றின் முன்பாக உரப்பையில் ஒருவர் கிடப்பதை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதையடுத்து பிரதேச வாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்தனர். மாவத்தகமவைச் சேர்ந்த காமினி திசாநாயக்க என்பரே குறித்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

TAMIL Eelam news 870

 சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தால் சிறுபான்மை சமூகத்திற்கே அதிக பாதிப்பு - ஆரிப் சம்சுதீன் எச்சரிக்கை நாட்டில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்குமாயின் சிறுபான்மை சமூகத்திற்கு உள்ள வர்த்தக நலன்கள் இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளதென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ஆரிப் சம்சுதீன் மேலும் கூறியுள்ளதாவது, “எமது சமூகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. போட் சிட்டி சட்டமூலத்தின் ஊடாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும் அபாயம் இருக்கின்றது. சிலவேளைகளில் சிறுபான்மை சமூகத்தின் வர்த்தக நலன்கள், இல்லாமல் போகலாம். போட் சிட்டியானது ஒரு தனி நாடு போன்று இயங்கும் நிலைமையே காணப்படுகின்றது. அங்கு செல்வதற்கு போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் அனுமதி பெற்றே உள் நுழைய முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAMIL Eelam news 869

 முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு! ஐ.நாவிடம் தமிழ் கட்சிகள் முக்கிய கோரிக்கை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மே 12 ம் திகதி விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட நிலையில், இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் கடிதம் தயாரிக்கப் பட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பம் பெறுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர். இக்கடிதம் ஐ.நாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹாநா சிங்கர் மூலமாக ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு ஆவணப்படுத்தக் கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, " 2009 மே 18ல் முடிவடைந்த கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள

TAMIL Eelam news 868

 கொரோனா மேலும் 44 பேர் பலி!   இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, இலங்கையில் 1,132 பேர் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 158,322 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 125,360 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை