முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d741 இயற்கை மருத்துவ உணவுகளைச்சாப்பிடுவோம்,

கெட்ட கிருமிகளை அடியோடு விரட்டும் வேப்பம் பூ ரசம் செய்வது எப்படி?
வெயில் காலங்களில் மட்டுமே அதிகம் பூத்துக்குலுங்கும் வேப்பம் பூவின் மகிமை தெரிந்தால் நிச்சயம் அதை உணவில் சேர்த்துக் கொள்வீர்கள். உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது இந்த வேப்பம் பூ, செரிமானத்தை அதிகரிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. எப்படி பயன்படுத்தலாம்? கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம். மூட்டுவலி, தசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் மூட்டு வலி எளிதில் குணமாகும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வேப்ப மரக் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர், பூ என அனைத்தும் மிக பயன் உள்ளது. வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம். அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்களால் அவதி படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் வேப்பம் பூ ரசம் செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம். கெட்ட கிருமிகளை அடியோடு விரட்டும் வேப்பம் பூ ரசம் செய்வது எப்படி? | Veppam Poo Rasam In Tamil
தேவையான பொருட்கள் வேப்பம் பூ - 2 மேஜைக்கரண்டி புளி - எலுமிச்சை அளவு தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 பூண்டு - 6 பல் மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை கறிவேப்பில்லை - சிறிது கொத்தமல்லி - சிறிது கடுகு - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு ரசப்பொடி - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை புளியை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். புளியை நன்றாக சாறு வரும் வரையில் நன்றாக கரைத்து ரசம் தயாரிக்கும் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும். புளி கரைசலில் வெட்டிய தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கையால் நன்றாக பிசைந்துவிடவும். தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் மற்றும் வேப்பம் பூ போட்டு நன்றாக தாளித்து அந்த பாத்திரத்தில் போடவும். இறுதியாக ரச கலவையை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கிவைக்கவும். இப்போது மருத்துவ குணம் நிறைந்த வேப்பம் பூ ரசம் ரெடி. இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் வைத்து சாப்பிடலாம். அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?