முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 780 தமிழ் தேசியக்கூட்டமைப்பில் உள் வீட்டுப்பிரச்சனை அதிகரிப்பு

இன்று தமிழர் பகுதியில் முடங்கும் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் தமிழ் மக்களின் இன, மத, வாழிட அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய மாபெரும் ஹர்த்தால் நாளை இடம்பெறவுள்ளது. இன்று தமிழர் பகுதியில் முடங்கும் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Services That Will Suspended In The Tamil Region ஏழு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த இந்த ஹர்த்தால் அழைப்புக்கு வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், தனியார் போக்குவரத்து துறையினர், பல்கலைகழக மாணவர்கள் என சகலரும் ஒத்துழைப்புக்களை அளித்துள்ளனர். இன்று தமிழர் பகுதியில் முடங்கும் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Services That Will Suspended In The Tamil Region இந்த நிலையில் வடகிழக்கு மாகாணங்கள் முடக்கும் வகையில் இன்று (25-04-2023) ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை மூடப்பட்டு ஆதரவளிக்கப்படும் என வர்த்தகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. நாளை போக்குவரத்து சேவைகளும் இடம்பெறாது என தனியார் போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளன. வடமாகாணம் முழுவதும் நாளை தனியார் பேருந்து சேவை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் இதே நிலைமையே காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. நாளை கல்விச்சேவைகளும் முடங்கும் என ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. வடக்கு கிழக்கு முழுவதும் நாளை பாடாசலை, தனியார் கல்வி நிலையங்களில் கற்பித்தல் செயற்பாடு முடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வீணாண அசசௌகரியங்களை சந்திக்காமலிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளை வடக்கில் சந்தை வியாபாரிகள் வர்த்தகத்தில் ஈடுபட மாட்டார்கள். இது தொடர்பில் அந்தந்த மாவட்ட சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் ஏற்கெனவே பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளனர். கிழக்கில் பகிரங்க அறிவித்தல் ஏதுவும் விடுக்கப்படாவிட்டாலும், நாளை சந்தைகளை மூடுவதென அனைத்து பிரதான நகரங்களிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை சலூன்களும் திறக்காது. வடமாகாண அழகக சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாளைய போராட்டத்தை வெற்றியடைய செய்ய, அழகக சங்கங்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கிலுள்ள சலூன்களும் நாளை மூடப்பட்டிருக்கும். நாளை நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதில்லையென பல சட்டத்தரணிகள் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. பல்வேறு மத அமைப்புக்களும் போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளன. திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் தவத்திரு அகத்தியர் அடிகளார், யாழ் மெய்கண்டார் ஆதீனத்தின் தவத்திரு உமாபதிசிவம் அடிகளார், இந்து சமய பேரவையின் தலைவர் ஈசான சிவசக்திகிரீவன் ஆகியோரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாளைய போராட்டத்திற்கு கடற்றொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பில், நாளை வடமாகாண தனியார் ஊழியர்கள் பணிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவித்துள்ளது. நாளைய கதவடைப்புக்கு முஸ்லிம் தரப்பும் ஆதரவளித்துள்ளது. மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலுள்ள பல பள்ளிவாசல்கள், வர்த்த சமூகங்கள் போராட்டத்தை ஆதரித்துள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?