முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 722 அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா வழங்கக்கோரி ஆஸ்திரேலியா முழுவதும் ஆர்ப்பாட்டம்!

அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா வழங்கக்கோரி ஆஸ்திரேலியா முழுவதும் ஆர்ப்பாட்டம்!
லேபர் அரசு கடந்த பெப்ரவரி மாதம், ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் உள்ள 19,000 பேருக்கு நிரந்தர தீர்வை அறிவித்திருந்த நிலையில், நிச்சயமற்ற எதிர்காலத்துடன் உள்ள 12,000 பேர் தமக்கான தீர்வை அரசிடம் தொடர்ச்சியாக கோரிவருகின்றனர். REFUGEES PALM SUNDAY RALLY Protesters are seen during the Refugee Action Coalition Palm Sunday march, Sydney, Sunday, April 2, 2023. (AAP Image/Flavio Brancaleone) NO ARCHIVING Source: AAP / FLAVIO BRANCALEONE/AAPIMAGE தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் தொடர்பில் பாரிய மாற்றத்தை அறிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, விசா நிராகரிக்கப்பட்டு எதிர்காலம் என்னவென்று தெரியாதநிலையிலுள்ள 12 ஆயிரம் பேருக்கும் நல்லதொரு முடிவினை வழங்கவேண்டுமென வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்ட பேரணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Palm Sunday-குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிட்னி, மெல்பன் உட்பட சுமார் 20 இடங்களில் இடம்பெற்ற பேரணிகளில், புகலிடக் கோரிக்கையாளர்கள், அகதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான செயற்பாட்டாளர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். PHOTO-2023-04-02-21-46-05.jpg Protesters rally for refugee rights Credit: Supplied Bridging விசாவில் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்பவர்களுக்கு, நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட வேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்டவர்கள் அழைப்பு விடுத்தனர். Advertisement மேலும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், நவுறு மற்றும் பப்புவா நியூ கினியில் தங்கவைக்கப்படுகின்றமையை நிறுத்துமாறும் கோரப்பட்டது. நேற்றைய பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களும் கலந்துகொண்டனர். சிலர் இப்பேரணிகளில் உரைகளையும் நிகழ்த்தியிருந்தனர். PHOTO-2023-04-02-21-46-06.jpg Protesters rally for refugee rights Credit: Supplied இதேவேளை கன்பராவில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய சுயாதீன செனட்டர் David Pocock, ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கைகள் மாற வேண்டிய நேரம் இது என்று வலியுறுத்தினார். ஆஸ்திரேலியாவில் TPV அல்லது SHEV விசாவில் வசிக்கும் 19,000 பேர், நிரந்தர விசா பெறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த பெப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது. ஆனால் முன்னாள் கூட்டணி அரசின் "fast-track" என்று அழைக்கப்படும் நடைமுறையின்கீழ் பாதுகாப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சுமார் 12,000 பேர் தொடர்பில் எவ்வித தீர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. நிரந்தர தீர்வுக்காகக் காத்திருக்கும் 12 ஆயிரம் பேரில், விசா நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 10,000 பேர், அமைச்சர் அல்லது நீதித்துறை மறுஆய்வுக்காகக் காத்திருக்கின்றறமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?