முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 731 தொடரும் சிங்களக் கைக்கூலிகளின் அட்டகாசம்,

யாழில் பெண் ஒருவரிடம் மோசடி கும்பல் கைவரிசை!
யாழ்.அச்சுவேலி - வளலாயில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த விசேட தேவையுடைய பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர் கோப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த பெண்ணிடம் அடுத்துவரும் மாதங்களில் அரசாங்கம் ஐயாயிரம் ரூபாய் சமுர்த்தி கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே அதற்காக தாம் ஒவ்வொரு சமுர்த்தி பயனாளிகளிடமிருந்தும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை அளவிடுகிறோம். என தெரிவித்து நான்கு படிவங்களைக் கொடுத்து அதில் கையொப்பமிட்டு வழங்குமாறு கூறி அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். தன்னிடம் தற்போது அவ்வளவு தொகை பணம் இல்லை அயலிலுள்ளவர்களிடம் பெற்றுத்தான் வழங்க வேண்டும் என வயதான பெண் தெரிவித்த போதிலும் பணம் உடனடியாக வழங்காவிட்டால் எதிர்வரும் மாதங்களில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்து வலுக்கட்டாயமாக குறித்த பணத்தினை பெற்றுள்ளார். யாழில் பெண் ஒருவரிடம் மோசடி கும்பல் கைவரிசை! | Fraud Gang Arrested A Woman பணத்தினை பறி கொடுத்த பெண் தனிமையில் இருந்த நிலையிலே வந்திருப்பவர் முகக்கவசத்தினை அணிந்தவாறு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என்று கடுந்தொனியில் தெரிவித்ததால் தனக்கு இது மோசடி என சந்தேகம் ஏற்பட்ட போதிலும் பணத்தை வழங்காவிட்டால் தனது உயிருக்கு ஏதேனும் விபரீதம் நிகழலாம் என்ற அச்சத்தினால் பணத்தை வழங்கிவிட்டு தொலைபேசி ஊடாக அயலவர்களுக்கு தெரிவிக்கலாம் என முயற்சித்தபோது தனது சிமாட் கையடக்க தொலைபேசி ஒன்றும் அங்கிருந்து களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொலைபேசி களவாடப்பட்டமை தொடர்பாகவும் டயலொக் தொலைபேசி நிறுவனத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை கடந்த வாரம் நீர்வேலி பகுதியிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பிரதேச செயலகத்திலிருந்து பதிவினை மேற்கொள்ள வருவதாக தெரிவித்து பல பண மோசடிகள் இடம் பெற்றுள்ளன. எனவே இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களை மிக அவதானமாக இருக்குமாறு பிரதேச செயலர் மற்றும் கிராம சேவையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?