முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 104 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் கைது

குளிரூட்டப்பட்ட லொறியில் கண்டுபிடிக்கபட்ட 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் சம்பவம்
ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குளிரூட்டப்பட்ட லொறியில் கண்டுபிடிக்கபட்ட 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் சம்பவம் | Germany Poland Border Truck 18 Immigrants Found மேலும் இச்சம்பவம் தொடர்பில் வெளியவருவது, குறித்த 18 புலம்பெயர்ந்தோரும் ஜேர்மன் - போலந்து எல்லைக்கு அருகில், கிழக்கு மாநிலமான Brandenburg-ல் கண்டுபிடிக்கப்பட்டனர். ஜேர்மனியின் உள்ளூர் ஊடங்களின்படி, குளிரூட்டப்பட்ட லொறிக்குள் அவர்கள் அனைவரும் காற்று புகாத கொள்கலனில் மூடப்பட்டிருந்தனர். குளிரூட்டப்பட்ட லொறியில் கண்டுபிடிக்கபட்ட 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் சம்பவம் | Germany Poland Border Truck 18 Immigrants Found சுங்க அதிகாரிகள் குபென் நகரில் ஒரு வழக்கமான சோதனையின் போது அவர்கள் லொறியில் கண்டுபிடித்தனர். அவர்களில் 5 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகளும் இருந்தனர், மேலும் 14 வயதுடைய இரண்டு ஆதரவற்ற சிறார்கள் இருந்தனர். அவர்கள் ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஜேர்மன் காவல்துறை கூறியது. அவர்களில் 12 பேர் ஈரானிலிருந்தும், 4 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்தும், இருவர் ஈராக்கிலிருந்தும் வந்தவர்கள் ஆவர். அவர்களின் வயது ஐந்து முதல் 44 வரை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். [ புலம்பெயர்ந்தோர் பதுங்கியிருந்த கண்டெயினரில் சுத்தமான காற்றோ வெளிச்சமோ இல்லை என ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டவர்கள் பசி, தாகம் மற்றும் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிலையில் அவதியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை Eisenhüttenstadt நகரத்தில் அருகிலுள்ள வரவேற்பு மையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், துணையில்லாத இரு இளைஞர்களை ஜேர்மனியின் இளைஞர் அதிகாரிகளான Jugendamts பொறுப்பேற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் 32 வயது ஓட்டுநர், லிதுவேனியன் நாட்டவர், விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?