முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 450

 மதுபோதையில் பேருந்தில்யிருந்து வீழ்ந்தே இளைஞர் பரிதாப நிலையில். மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிசமான இளைஞர்கள் மது பாவினைக்கு அடுமை ஆகிய உள்ளதாக அங்கு நடக்கும் சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.  ரவி. திலக்ஷ் என்ற இளைஞர் செங்கலடியிருந்து 26/ 03 / 2021 அன்று காலை  தனது ஊரான உறுகாம் எனும் கிராமத்திற்கு பேருந்தில் பயணித்துக்கொண்டுயிருக்கும்போது தவறி விழுந்துள்ளார். இவ் இளைஞர் மதுபோதையில் பேருந்து இறங்கும் இடத்தில் நின்று பயணித்துள்ளார் அப்பொழுது மதுபோதையில் பேருந்தில் இருந்து சாலையோரமாக விழுந்து அவரின் தலைப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

TAMIL Eelam news 449

 இலங்கையில் மீண்டும் ஏற்படும் அபாயம்! தொடரும் கண்காணிப்பு நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாக ஈடுபட பிரித்தானியா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அலுவலக இரா­ஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார். இலங்கை, தென் சூடான், சிரியா, ஈரான், மியான்மர், பெலாரஸ் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகள் குறித்த முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ.நா மனித உரிமைகள் பேரவை 46வது அமர்வை முடிவுக்கு கொண்டுவந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இலங்கை மீதான தீர்மானத்தை வரவேற்கிறேன். இது மோதலுக்கு பிந்தைய நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. கடந்த காலத்தின் கடுமையான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் மீளவும் ஏற்படகூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்த உயர் ஸ்தானிகரின் அறிக்கைக்கும் இது பதிலளிக்கிறது, ”என்று அவர் கூறினார். எனவே ஐ.நா. தனது கண்காணிப்பைத

TAMIL Eelam news 448

 ஏ 9 வீதியில் கோர விபத்து - இரு சிறுவர்கள் பலி! ஏ 9 வீதியில், பளை - இத்தாவில் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்திளார் தெரிவித்தார். சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய திசையில் கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இராணுவ வாகனம் என தமிழர்கள் சந்தேகம்

TAMIL Eelam news 447

 தயாரிப்பாளருடன் சமரசமாக இருக்க வேண்டும்.. படுக்கை அழைப்பு பற்றி நடிகை பகிர்ந்த பகீர் செய்தி இது தான் ! ஹிந்தி நடிகை அங்கிதா லோகண்டே நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறியுள்ளார். சினிமா துறையில் நடிகைகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக சில நடிகைகள் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஹிந்தி நடிகையான அங்கிதா லோகண்டேவும் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இவண் மணிகர்ணிகா, பாஹி 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன். ஒரு படத்தில் படிக்கச் சென்றபோது தயாரிப்பாளரிடம் சமரசமாக இருக்க வேண்டும் என்று கூறினார். நானோ உணவு சாப்பிடச் செல்ல வேண்டுமா அல்லது வேறு எந்த மாதிரி என்று கேட்டேன். அதற்கு அந்த தயாரிப்பாளர் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார். அதனால் அப்படத்தில் இருந்து விலகினேன். இதை தொடர்ந்து தொலைக் காட்சிகளில் நடித்து நான் பிரபலமாக இருந்த போது மற்றுமொரு சமரசத்திற்கு அழைத்தனர். அப்போது அங்கிருந்து உடனே கிளம்பி விட்டேன் என்று கூறியுள்ளார்.

TAMIL Eelam news 446

 மியான்மரில் 7 வயது சிறுமியை சுட்டு கொன்ற ராணுவம் மியான்மரில் பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. ஆட்சி கவிழ்ப்பு நடந்த பிப்ரவரி 1 முதல் இப்போது வரை 260-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் சிவில் உரிமைகள் குழு கூறுகிறது. பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் நேற்றுமுன்தினம் இரவு மண்டலே நகரில் உள்ள வீடுகளுக்குள் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து போராட்டக்காரர்களை கைது செய்தனர். அப்போது மவுங் கோ ஹாஷின் பா என்பவரை கைது செய்ய ராணுவ வீரர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது மவுங் கோ ஹாஷின் பாவின் 7வயது மகள் கின் மோ சிட் ராணுவ வீரர்களைக் கண்டு பயந்து தனது தந்தையை நோ

TAMIL Eelam news 445

 ஜெனிவா தீர்மானத்தின் எதிரொலி! குற்றவாளிகள் மீது பொருளாதாரத் தடை? விசேட கோரிக்கை இலங்கையில் கடுமையான குற்றச்செயல்களுக்கு காரணமானவர்கள் எனத் தெரிவிக்கப்படுபவர்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிக்கிடைக்கவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் போரினால்;பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றைப் பெற உதவக்கூடிய வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தீர்மானத்திற்காக பிரசாரம் செய்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு பழிவாங்கலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் பேரவை,மற்றும் உறுப்புநாடுகள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் கண்காணிப்பகம் கோரியுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 46-1, எதிர்காலத்

TAMIL Eelam news 444

 இலங்கை மீதான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு கனடா உதவும்! இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை அங்கு இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக கனடா அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ அறிக்கை ஒன்றினை வெளியிட்டு மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் குறித்த பிரேரணை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்த சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார். இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சபை உறுப்பினர்களுடன் இணைந்து கனடா பணியாற்றியது என்றும் மார்க் கார்னியோ சுட்டிக்காட்டினார். மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை கட்டாயப்படுத்துவதன் மூலம் இலங்கையில் பொறுப்புக்கூறலை புதிய தீர்மானம் முன்வைக்கிறது. ஆகவே எதிர்கால பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்கு இந்த ஆணை முக்