முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b716

தொடர்ந்து பீதியில் வாழ்ந்து வரும் சிங்கள வெறியர்கள்
கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான காவல் துறை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை (1) இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு கடமையில், சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்தக் கடமைகளுக்காக கொழும்பில் அதிகளவான புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கைது செய்தல், பொது இடங்களில் திரியும் திருடர்களை கைது செய்தல், மக்களை துன்புறுத்துபவர்கள், சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களை இனங்கண்டல், போக்குவரத்து நெரிசலை குறைத்தல் ஆகியன இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ளடங்கும் என, காவல் துறை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், மக்கள் அதிகம் கூடும் காலி முகத்திடலில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வாகனங்களை நிறுத்த விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?