முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b668

ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்துவதற்கான புதிய திட்டம்!
ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்தும்வகையில், பல்சமூகங்களை உள்ளடக்கிய Community Sponsorship செயற்றிட்டமொன்றை, பரீட்சார்த்த அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளது. CRISP என அழைக்கப்படும் Community Refugee Integration and Settlement Pilot என்ற இத்திட்டம் குறித்த அறிவிப்பை குடிவரவுத்துறை அமைச்சர் Alex Hawke நேற்று வெளியிட்டார். கனடாவில் நடைமுறையிலிருப்பதைப் போன்ற இச்செயற்றிட்டத்தை, ஆஸ்திரேலியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் கடந்த பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டுவந்த பின்னணியில், ஆஸ்திரேலிய அரசு இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. Refugee Council of Australia உட்பட பல அமைப்புக்களின் பங்களிப்பைக் கொண்ட CRISP திட்டத்தில், ஆஸ்திரேலிய அரசும் இணைந்துகொண்டு தனது பங்களிப்பை வழங்கவுள்ளதாக அமைச்சர் Alex Hawke தெரிவித்தார். பரீட்சார்த்த அடிப்படையில், அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இத்திட்டத்தின் இறுதி வடிவம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள தகவல்களின்படி CRISP திட்டமூடாக சமூக அமைப்புகள், சமய அமைப்புகள், மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 1500 அகதிகளை அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தமுடியும். ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR-ஆல் ஆஸ்திரேலியாவிடம் பரிந்துரைக்கப்படுபவர்கள் அல்லது ஆஸ்திரேலியாவுடன் எவ்வித தொடர்புகளும் இல்லாதவர்கள், இத்திட்டம் ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படலாம். CRISP திட்டம் ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுபவர்களுக்கு Medicare வசதி வழங்கப்படும் அதேநேரம் வருமான உதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கைக்குள்ளேயே CRISP திட்டத்தினூடாக உள்வாங்கப்படுபவர்களும் அடங்கவுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?