முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b652

அமெரிக்காவை புரட்டிப்போட்ட வரலாற்றில் மிகவும் மோசமான சூழல் சுறாவளி! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் 80ற்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை காவுகொண்ட சூழல் சுறாவளியில் சிக்கி உயிர்பிழைத்தவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. கென்டக்கி, மிசோரி, டென்னசி மற்றும் மிசிசிப்பி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் 30 ற்கும் மேற்பட்ட சூழற்சுறாவளி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழல் சுறாவளி காரணமாக கென்டக்கி மாநிலமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தை பேரழிவு ஏற்பட்ட இடமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரகடனம் செய்துள்ளார். கென்டக்கி மாநிலத்தின் மேஃபீல்ட் நகரில் உள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலைக்குள் இருந்த பலர் சூழற் சுறாவளியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைக்குள் 110 பேர் வரை பணியாற்றிக்கொண்டிருந்தார்கள் எனவும் அவர்களில் 40 பேர் வரை மாத்திரமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் மாநில ஆளுநர் அன்டி பெஷியர் கூறியுள்ளார். குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில், காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் ஆயின் அது அதிசயமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான சூழல் சுறாவளி தாக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டலாம் எனவும் எச்சரித்துள்ளார். கென்டக்கியில் மாநில ஆளுநர் அன்டி பெஷியர், அவசர நிலைமையை பிரகடனம் செய்துள்ளார். மாநிலத்தை இதுவரை தாக்கிய சுழற் சுறாவளிகளில் மிகவும் கொடூரமான ஒன்றாக இந்த சூழற் சுறாவளி அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேஃபீல்ட் மற்றும் ஏறழத்தாழ 365 கிலோமீற்றர் தூரத்திற்கு சூழற்சுறாவளி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், கென்டக்கி மாநிலத்தின் ஏறத்தாழ முழுமையான பகுதியும் பாரிய அழிவை சந்தித்துள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். மேஃபீல்ட் பகுதியில் மீட்பு பணியாளர்களுடன் இணைந்து செயற்பட்டுவரும் காங்கிரஸ் உறுப்பினரான ஜேம்ஸ் கமர், வாழ்நாளில் இதுபோன்ற சுழல் சுறாவளியை கண்டிருக்கவில்லை என கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?