முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 414 தமிழர்கள் வெளிநாட்டிற்கு ஓட்டம் சிங்களவர்களிற்கு வேலை வாய்ப்பு நடப்பது என்ன?

  வடக்கில் ஒரு லட்சம் தென்னிலங்கையர்கள்: அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை!  By Shankar  50 நிமிடங்கள் முன்             விளம்பரம் வடக்கில்  வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட 1 லட்சம் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் (30-10-2023) காலை பிரதமரோடு கலந்துரையாடி இருந்தேன். வடக்கில் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்கள் தமிழ் பேசுகின்ற மக்கள். தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற போது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. அது உடனடியாக களையப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தேன். இதற்கு முன்னர் அமைச்சரவையிலும் அவரோடு கலந்துரையாடி இருக்கின்றேன். ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் தென்னிலங்கையில்

e 413 போர் நிறுத்தம் செய்தால் பல பலமானவர்கள் வென்று விடுவார்கள் பலயீனமானவர்கள் தோற்றுவிடுவார்கள் இவர் ஏன் பயப்பிடுகின்றார்கள்,?

  போர் நிறுத்தம் : ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமம்: நடக்காது என்கிறார் நெதன்யாகு  By Sumithiran  1 மணி நேரம் முன்             விளம்பரம் காசா போர் போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமமான ஆபத்தானது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று கூறினார். பயங்கரவாத குழுவை தோற்கடிக்க தனது நாட்டின் இராணுவ நடவடிக்கையை ஆதரிக்க உலக சமூகத்தை அவர் வலியுறுத்தினார். ஒருபோதும் இஸ்ரேல் உடன்படாது “அமெரிக்கா பேள் ஹாபர் குண்டுவெடிப்புக்குப் பிறகு [1941 இல்] அல்லது 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு [2001 இல்] போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாதது போல,ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரமான தாக்குதல்களுக்குப் பிறகு ஹமாஸுடனான பகையை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உடன்படாது என நெதன்யாகு வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு ஆங்கில மொழி மாநாட்டின் போது கூறினார். "ஹமாஸிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திற்கு சரணடைய வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அழைப்பு விடுப்பது போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள், அது நடக்காது" என்று நெதன்யாகு கூறினார். போரில் திடீர் திருப்ப

e 412 திட்டமிட்ட சதியா குழம்பும் மக்கள்

  திருமண வைபவத்தில் கலந்துகொண்ட இளம் பெண் திடீர் மரணம்!  By pavan  4 மணி நேரம் முன்             விளம்பரம் புத்தளம் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட யுவதி திடீர் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார். குறித்த திருமண நிகழ்வில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்ட போது அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த யுவதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறையில் தொலைபேசி பாவனை: தேடுதல் வேட்டையில் சிக்கிய பொருட்கள் மரண விசாரணை ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார். யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி குலேந்திர பிரேமதாச மேற்கொண்டார். மரணம் தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற

e 411 குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்!

  குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்! அம்பலமான சம்பவம்  By Shankar  1 மணி நேரம் முன்             விளம்பரம் இந்தியாவில் தமிழகத்தில் பெற்ற குழந்தையை பால் கேனில் போட்டு தாயொருவர் கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் 5 நாட்கள் நாடகமாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.  இச்சம்பவம் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தேனி மாவட்டம் போடியை சேர்ந்த 23 வயதான மணிகண்டனுக்கும் 19 வயதான சினேகா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், சில மாதங்களில் கர்ப்பமாகிய இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் வீட்டிற்கு பிரசவத்திற்கு சென்ற சினேகாவின் தாய் மற்றும் தந்தை கேரளாவிற்கு வேலைக்கு சென்ற நிலையில், அவரது பாட்டி சரசு என்பவர் அவருக்கு துணையாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22ம் திகதி காலையில் குளிக்க சென்றுவிட்டு திரும்பி வந்த போது குழந்தையை காணவில்லை என்றும் யாரோ தூக்கி சென்றுவிட்டதாக கூறியுள்ளார். பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் வீட்டிற்குள் சோதனை செய்த போது குழந்தை சடலமாக ந

e 410 ஹமாஸ் திடீர் தாக்குதலால் வசமாகச் சிக்கிய இஸ்ரேலிய பிரதமர்! | Israel Gaza...

ஹமாஸ் அமைப்பினரை தேடி வேட்டையாடும் இஸ்ரேல்!  By pavan  2 மணி நேரம் முன்             விளம்பரம் இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் பலஸ்தீன போராளிகளை இஸ்ரேல் தேடி வேட்டையாடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே தொடங்கிய போர் தீவிரமடைந்துள்ளது. இதுவரை பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் 110 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 29லிருந்து 31 வரை வயதுடைய 3 பேர் இன்று அதிகாலை நேரத்தில் பலஸ்தீனத்தின் ரமல்லா பகுதியின் வடமேற்கிலுள்ள பெய்ட் ரிமா, நப்லு பகுதியில் உள்ள அஸ்கர் அகதிகள் முகாம் மற்றும் வடக்கே உள்ள டுபாஸ் நகர் ஆகிய 3 இடங்களில் இஸ்ரேல் இராணுவ படையினரால் கொல்லப்பட்டனர். காசாவிற்காக முன்வரும் உலகின் முதல் பணக்காரன்! இஸ்ரேல் மீது வெடிகுண்டு மூன்று இடங்களிலும் ஹமாஸ் அமைப்பினரை தேடும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வந்தது. இதில் மறைவிடங்களில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இந்த மூவரும் கொல்லப

e 409 இஸ்ரேலுக்குள் முதல் தடவையாக ஈரானிய ஏவுகணை தாக்குதல்! | Israel Gaza War i...

காசா மீதான தாக்குதல்கள் தீவிரம்; பள்ளத்தாக்கில் சிக்குண்டுள்ள இலங்கையர்கள்  By Yadu  3 மணி நேரம் முன்             விளம்பரம் இஸ்ரேல் காசா மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முழுமையான போர் தொடர்பில் அச்சங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 இலங்கையர்கள் தொடர்ந்து காசா பள்ளத்தாக்கில் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் தற்போது தென்காசாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எகிப்திற்கு செல்லும் ரபா எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்களை வெளியேற்ற முடியாத நிலையில் இலங்கை அதிகாரிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் பெயர்ச்சியால் அதிஷ்டத்தின் ஆதரவுடன் இருக்க போகும் 3 ராசிகள் இலங்கை தூதுவர் தெரிவித்த கருத்து "எகிப்திற்கு செல்வதற்கு இதுவே ஒரே வழி இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரேவழியாக இது காணப்படுகின்றது. அங்குள்ள இலங்கையர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். எனினும் மோசமான நிலையில் வாழ்கின்றனர்" என பாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நவலகே பெனெட் குரே தெரிவித்துள்ளார். அனுலா ரத்நாயக