முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 489 மேலாடை அணியாமல் உக்ரைன் பெண் போராட்டத்தில்ஈடுபட்டார்

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி..!! மேலாடை அணியாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் பெண் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பின்போது, பெண் ஒருவர் மேலாடை அணியாமல் தனது உடலில் உக்ரைன் கொடியின் வண்ணங்களை வரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற திரைப்பட விழாவில், ‘எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள்’ என ஒற்றை பெண்ணாக அவர் கோஷம் எழுப்பியது உலக அரங்கை அதிரவைத்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்து செல்வதற்கு முன்பு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அங்கிருந்த புகைப்பட கலைஞர்களுக்கு அவர் மேலாடை இன்றி போஸ் கொடுத்தார். அந்த நேரத்தில், ஜார்ஜ் மில்லர் இயக்கிய ‘ஆயிரம் ஆண்டுகளாக காத்திருக்கிறேன்’ என்ற படத்தை பார்க்க நடிகர்கள் டில்டா ஸ்விண்டன், இட்ரிஸ் எல்பா ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் வந்து கொண்டிருந்தனர். ஆனால், உக்ரைன் பெண் நடத்திய போராட்டம் காரணமாக சிவப்பு கம்பள வரவேற்பில் விருந்தினர்களின் அணிவகுப்பு சற்று நேரம் தடைபட்டது.

c 488 தோல்வியை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர்!

தோல்வியை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர்! மகிழ்ச்சியை கொண்டாடும் அகதிகள் “எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வரவிருக்கும் அவுஸ்திரேலிய பிரதமரான அந்தோணி அல்பனீஸின் தேர்தல் வெற்றிக்கு எனது வாழ்த்துகளை கூறினேன்,” என தாராளவாத தேசிய கூட்டணியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், அவுஸ்திரேலிய தாராளவாத தேசிய கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேர்தலில் ஆளும் தாராளவாத தேசிய கூட்டணி தோல்வி அடைந்தது குறித்து பல அகதிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். தோல்வியை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர்! மகிழ்ச்சியை கொண்டாடும் அகதிகள் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சஜத் அஸ்கரி எனும் ஆப்கானிய அகதி, “அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக வந்ததால் சுமார் 15 ஆண்டுகளாக எனது தாயிடமிருந்து நான் பிரிந்திருக்கிறேன். இன்றிரவு (தேர்தல் முடிவு வெளியாகிய நேரம்) நான் அழுதேன், இறுதியாக எனது தாயையும் பிற குடும்ப உறுப்பினர்களையும் பார்ப்பதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி! இரக்கம், கண்ண

c 487 கோட்டாபயவின் வாழ்த்து செய்தி

அவுஸ்திரேலியா புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற முனைப்பு காட்டும் கோட்டாபய அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார். அவுஸ்திரேலியா பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றது மோரிசனின் கூட்டணி பலவீனமடைந்துள்ளது. இதையடுத்து, 31வது பிரதமராக அந்தோணி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளார்.

c 486 இலங்கை தொடர்பில் சீனவின் கருத்து

இலங்கை தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சீனா சாதகமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் தினசரி செய்தியாளர் சந்திப்பில் நேற்று (20ம் திகதி) அதன் பேச்சாளர் வான் வென்பின் இதனைத் தெரிவித்தார். “இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா முழுமையாக அறிந்துள்ளது. இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் வினைத்திறனான பங்கை ஆற்றுவதற்கு சீனா தயாராக உள்ளது. இலங்கை தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு இலங்கையின் சீனத் தரப்பிற்கான கடனுக்கு முறையான தீர்வைக் காண இலங்கையுடன் ஆலோசனை நடத்துவதற்கு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு சீனா உதவுகிறது. தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதுடன், இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்கை தொடர்ந்தும் ஆற்றும். வெளிநாட்டு முதலீடு மற்றும் நிதிப் பங்காளிகளின் நியா

c 485 லேபர் கட்சி வெற்றி பெற்றது.

10 வருடமாக இலங்கை அகதிகளை எடுக்கும் ஒரு கச்சியாக லேபறை தவறான முறையில் பரப்புரை செய்யது தோல்வி அடைய செய்தது லிபரல் . கடுமையான தோல்வி அடைந்தாலும் அவர்களின் குறிக்கோலில் எப்பொழுதும் மாறவில்லை இறுதியாக நடந்த தேர்தலில் கூட தாங்கள் வந்தால் 20000 அகதிகளிற்கு நிலந்தர விசா கொடுப்போம் என சொல்லித்தான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு அவர்கள் வெற்றிவாகை சூட்டினார்கள். இதில் இருந்து அவுஸ்திரேலியாவில் வாழும் மக்கள் நல்லவர்கள் என்பதை லேபர் கட்சி நிருபித்துவிட்டது. நாட்டில் நேற்று (மே 21) நடந்து முடிந்த பெடரல் தேர்தலில் எதிர்கட்சியான லேபர் கட்சி வெற்றி பெற்றது. புதிய பிரதமராக Anthony Albanese திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளார். வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருவதால் லேபர் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் அரசு அமையுமா அல்லது லேபர் தலைமையில் சிறுபான்மை அரசு அமையுமா என்பது விரைவில் தெரியவரும். லேபர் கட்சி ஒருவேளை அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறினாலும், இக்கட்சி அதிக இடங்களை கைப்பற்றியிருப்பதால் வெற்றி பெற்றிருக்கும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் லேபர் அரசுக்கு ஆதரவு தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிற

c 484 கொழுப்பை நீக்கி தன்னையும் அழித்த நடிகை

கொழுப்பை நீக்கச் சென்ற 21 வயது நடிகை சிகிச்சையின் போது மரணம் புரட்டிப் போட்ட விடையம் ! பெங்களூருவில் 21 வயது சின்னத்திரை நடிகை கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்துள்ளார்.சேதனா ராஜ் 21 வயது கன்னட சின்னத்திரை நடிகை. கீதா, தோரிசாணி, ஒலவினா நில்தானா ஆகிய சீரியலில் நடித்துள்ளார். ஹவயாமி எனும் கன்னட படத்திலும் நடித்துள்ளார்.செதனா ராஜின் தந்தை கோவிந்த ராஜ் கூரியதவாது : பெற்றோர்களது சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும் தகுந்த உபகரணங்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவமனையின் அஜாக்கிரதையாலே எனது மகள் உயிரிழந்துள்ளார். சேதனா ராஜின் தாயர், “எனது மகள் ஆரோக்கியமானவர். எந்த நோயும் இல்லாதவர். அவளுக்கு மார்பின் மீது அதிகமான கொழுப்பு இருக்கிறது யாரோ கூறியதைக் கேட்டு நண்பர்களுடன் மருத்துவமனை வந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். எங்களது சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவமனையின் மீது நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்போம்” எனக் கூறியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது நுரையீரலில் நீர் தங்கியிருந்ததாலே இறப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியி

c 483 கனடாவில் ஈழத்தமிழர் முக்கிய நகர்வில் முட்டுக்கட்டையாகும் இலங்கை அரசு | #...

கனடாவில் ஈழத்தமிழர்களின் முக்கிய நகர்வில் முட்டுக்கட்டையாகும் இலங்கை அரசு (VIDEO) இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதற்கான சரியான ஆதாரங்கள் எதுவுமில்லையென்ற குற்றச்சாட்டு சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக கனடாவின் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சுயாதீன தீர்ப்பாயத்தை அமைத்து இனப்படுகொலையை கனடா விசாரிக்க வேண்டும் என அனைவரினாலும் கோரப்பட வேண்டுமெனவும், அவை தவறும் பட்சத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து விசாரிக்கும் படி தொடர்ந்து கனடாவிற்கு அழுத்தம் கொடுப்பார்களாயின் உலக நாடுகள் அனைத்தும் இனப்படுகொலையை ஏற்றுக்கொண்டு குரல் கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்