முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 798 தாயகத்தில் தொடரும் மண்பறிப்பு

தமிழர்களை ஏமாற்றும் சிறிலங்கா இராணுவம்..! தாரைவார்க்கப்படுகிறதா மற்றுமொரு பகுதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (03) பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இராணுவ அதிகாரி ஒட்டுசுட்டான் நகர மையப்பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்தின் 25 ஏக்கர் காணி மற்றும் இரண்டு தனிநபர் காணி மற்றும் இந்து மயானம் ஆகியவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள 64 ஆவது படைப்பிரிவு முகாமிற்காண காணி ஆவணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு தமிழர்களை ஏமாற்றும் சிறிலங்கா இராணுவம்..! தாரைவார்க்கப்படுகிறதா மற்றுமொரு பகுதி | Land Acquisition For Sri Lanka Army Mullaitivu அதற்கு, “மக்களின் காணி, இந்து மயானம் என்பன விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது அது இன்னும் விடுவிக்கப்படவில்லை எனவும் மீதி அபகரிக்கப்பட்ட 25 ஏக்கர் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் தமது கருத்துக்களை இதுவரை வழங்கவில்லை அவர்களுடைய கருத்துக்கு பின்பே இது தொடர்பாக முடிவு வழங்கலாம்” என்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பதில் வழங்கியிருக்கிறார். தமிழர்களை ஏமாற்றும் சிறிலங்கா இராணுவம்..! தாரைவார்க்கப்படுகிறதா மற்றுமொரு பகுதி | Land Acquisition For Sri Lanka Army Mullaitivu இருப்பினும் பல காலமாக மயானம் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படும் நிலையில் குறித்த பகுதி மக்கள் மயானத்துக்கு பல மயில்கள் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும், காணியை விடுவிக்கிறோம் என சிறிலங்கா இராணுத்தினர் ஏமாற்றி வருவதாகவும், அதனை விரைவில் விடுமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?