முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 759 தமிழர்களை அடிமைப்படுத்தும் இந்திய அரசு; கஜேந்திரன் எம்.பி

தமிழர்களை அடிமைப்படுத்தும் இந்திய அரசு; கஜேந்திரன் எம்.பி யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப் பவனி திருகோணமலையை வந்தடைந்துள்ளது. திருகோணமலையில் குறித்த ஊர்தி பவனியை திருகோணமலை தமிழர் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர்கள் தபால் கந்தோர் சந்தியில் வரவேற்று அஞ்சலி செலுத்தினர். அன்னை பூபதியின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப் பவனி இன்று (17) மாலை 6.00 மணியளவில் திருகோணமலையை வந்தடைந்தது. இவ்வாகன தொடரணியில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். இன்றைய தினம் அன்னை பூபதி தாயினுடைய திரு உருவப்படம் தாங்கிய ஊர்தியோடு தமிழர் தேசத்தினுடைய தலைநகர் திருகோணலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம். 35 வருடங்களுக்கு முன் தமிழீழ மண்ணிலே வந்திரங்கிய இந்திய படைகள் தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்தி பாரிய படுகொலைகளை கட்டவிழ்த்து கொண்டிருந்த

d 758 ஏழு வருடங்களாக படுக்கையில் போராடும் முன்னாள் போராளி!

ஏழு வருடங்களாக படுக்கையில் போராடும் முன்னாள் போராளி! இலங்கையில் தற்போதைய நிலையில் சாதாரண நிலையை உடைய மக்களே அன்றாட உணவிற்கு பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும். அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும், மக்களுக்கான ஊடகங்களுக்கும் உண்டு. இப்படி வறுமையில் வாழும் குடும்பங்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில்,மட்டக்களப்பு மாவட்ட வாகரை பகுதியின் கதிரவெளி என்னும் கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் நிலையை, அவர்களது தேவைகளை வெளிக்கொணர்கிறது ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' நிகழ்ச்சி

d 757 பணத்திற்காக அம்மணிற்கு சொந்தமான விலங்குகளையும் விட்டு வைங்காத சிங்கள வெறியர்கள்?

குரங்கு ஏற்றுமதி தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு சீனாவுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குவது தொடர்பில் உறுதியான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள மிருககாட்சிசாலைக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குவமாறு சீன பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, சீனாவுக்கு குரங்குகளை வழங்குவது தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் வெளியாகின. அந்தவகையில் இலங்கைக்கே உரித்தான குரங்குகளை பிற நாட்டுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுற்றாடற்துறை ஆய்வாளர்கள் விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளார்கள். குரங்கு ஏற்றுமதி தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு | Ministry Of Agriculture Regarding Monkey Export இதனை தொடர்ந்து சீனாவுக்கு குரங்குகளை வழங்குவது தொடர்பில் ஆராய நீதியமைச்சு, விவசாயத்துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் வனஜீவராசிக

d 756 யாழில் டெங்குநோய்அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பெண் சிப்பாய் உயிரிழப்பு யாழ்ப்பாணம் குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றும் 23 வயதுடைய பெண் சிப்பாய் டெங்கு தொற்றினால் உயிரிழந்துள்ளார். கடந்த 5ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதி யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பெண் சிப்பாய் உயிரிழப்பு | Sri Lankan Female Soldier Killed In Jaffna அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதனால் கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கொழும்பைச் சேர்ந்த கே.எம் .கே .செவ்வந்தி என்ற பெண் சிப்பாயே உயிரிழந்தவராவார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

d 755 அரசின் தமிழர் விரோதப்போக்கைப்பார்த்து சீறிப்பாய்யும் தமிழர்கள்,

அழிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் அத்திபாரங்கள் பிடுங்கப்படுகின்றனவா ? – ஸ்ரீநேசன் பௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை பௌத்த பிக்குகளின் கோரிக்கையில், தமிழர் தேச அத்திபாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் – இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை சிங்கள அடிப்படைவாத ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். தற்போது,பாரிய தமிழின அழிப்பின் பின்னர், தமிழர் தேச அத்திபாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்கின்றனர். தமிழின ஒடுக்கு முறை அச்சுறுத்தல், மிரட்டல், இன அழிப்பு, சொத்தழிப்பு, வெளியேற்றல், அகதிகளாக்க

d 754 அரசகைக்கூலிகளின் கருத்துருவாக்கம் அரசை நோகதாபடி பார்த்துக்கொள்ளும் இவர்களின் அறிவாற்றல்?

வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுவதில்லை; வடக்கு ஆளுநர்! அரசாங்கத்தால் வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுவதில்லை எனவும் சரியான முதலீட்டாளர்களை இனம் கண்டு அவர்களின் திட்டங்களுக்கே தேவையான காணிகளையே வழங்குவதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வட மாகாண ஆளுநர் செயலகம், யாழ். மாவட்ட செயலகம் 51 ஆவது காலால் படை ஆகியன இணைந்து யாழ். துரைப்பா விளையாட்டு அரங்கில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த புது வருட விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிலையில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே ஜீவன் தியாகராஜா இதனை தெரிவித்தார். இந்நிலையில் வடக்கில் 700 ஏக்கர் நிலம் சீனாவுக்கு வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பதில் அளித்த ஆளுநர், சிறிதரன் கருத்தை நான் அறியாத நிலையில் அவருடைய கருத்துத் தொடர்பில் பதில் கூற முடியாது. அரசாங்கத்தை பொறுத்தவரையில் நாட்டை பொருளாதார நிதியில் முன்னேற்றுவதற்கான தேவைப்பாடுகள் இருக்கும் நிலையில் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுவதில்லை; வடக்

d 753 சிலந்திவலையில் யாரை சிக்க வைக்கலாம் திட்டம் போடும் ரணில்?

தென்னாபிரிக்க பொறியில் புலம்பெயர் அமைப்புகள்.. ! இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் கொழும்பிலிருந்து தேசிய நல்லிணக்க பூங்கொத்து நீட்டப்படுவது தெரிகின்றது. 13 ஆவது திருத்தத்தின் நடைமுறை, சர்வதேச தரத்துக்கு அமைவான புதிய பயங்கரவாத தடைச் சட்டம், உண்மையை கண்டறியும் பொறிமுறை என இந்த தேசிய நல்லிணக்கம் காட்சிப்படுத்தப்படுகின்றது. நல்லிணக்க பொறிமுறை தென்னாபிரிக்க பொறியில் புலம்பெயர் அமைப்புகள்..! | Prevention Of Terrorism Anti Terrorism Act இந்த நகர்வுகளின் ஒரு பகுதியாக, இலங்கையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்க பொறிமுறைக்காக விரைவில் புலம்பெயர் அமைப்புகள் சில தொடர்புகொள்ளப்படும் சாத்தியங்களும் தெரிகின்றன. அநேகமாக இந்த மாத இறுதியில் இதற்கான சந்திப்புகள் மற்றும் பேச்சுக்கள் இடம்பெறலாம் என ஊகிக்கப்படுகிறது. இந்தியா இல்லை என்றால், தென்னாபிரிக்காவில் இதற்கான சந்திப்புகள் மற்றும் பேச்சுகளில் பங்கெடுக்கக்கூடிய சாத்தியப்பாடுகளை உடைய புலம்பெயர் அமைப்புகளும் ஊகிக்கப்படுகின்றன. இதற்காக, மேற்குலகத்துடன் நல்ல தொடர்பாடலைக் கொண்ட ஒரு அமைப்பு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.