முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 638 செய் அல்லது செத்து மடி ஒரு துளியும் கொழ்கை மாறாதே தமிழர்கள் .

பாரிசில், உணர்வுபூர்வமாக நடைபெற்ற "எழுக தமிழா" நிகழ்வு (படங்கள்) "எழுக தமிழா" எழுச்சி நிகழ்வு இலங்கைஅரசினால், காலாகாலமாக தமிழ்மக்கள்மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பிற்கு நீதிகேட்டும்,பறிக்கப்பட்டுவரும் தமிழர்களின் இறையாண்மைக்கான உரிமையை பெற்றுத்தர ஆவன செய்யக்கோரியும், திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரும் நமது தேசிய அடையாளங்களை நிலைநிறுத்த வேண்டியும், பிரான்ஸ் வாழ் தமிழ்த்தேசிய அமைப்புகளின் ஒன்றிணைவில் முன்னெடுக்கப்பட்ட "எழுக தமிழா" எழுச்சி நிகழ்வானது 22.06.2022, பாரிசின் République சுதந்திர சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வினை இளையோர் தலைமையேற்று நடத்தியிருந்தமை சிறப்பான விடயமாகும். இந்நிகழ்வில் பிரான்ஸ் நகரசபைகளின் முக்கிய உறுப்பினர்கள், இனவிடுதலையை நேசிக்கும் மக்கள்,உணர்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 22.06.2022 மாலை மூன்று மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பொதுச்சுடரினை la Courneuve நகரசபை உறுப்பினர் திருமதி.சுகுர்ணா ஸ்ரீகணேஸ் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தேசியக்கொடியேற்றல் நிகழ்வு. இதன்போது, பிரெஞ்சு தேசியக்கொடியினை Vitry

c 637 எரிபொருளிற்காக உயிர் போனது.

யாழில் இளைஞன் திடீர் மரணம் - எரிபொருள் பெற சென்றவேளை இடம்பெற்ற கைகலப்பு காரணமா ....! யாழில் இளைஞன் திடீர் மரணம் யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைகலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடுவில் செபமாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-23) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்த இளைஞனும் , அவரது நண்பரும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றிருந்தனர். யாழில் இளைஞன் திடீர் மரணம் - எரிபொருள் பெற சென்றவேளை இடம்பெற்ற கைகலப்பு காரணமா ....! எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடுகள் அதன்போது , குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இருவரும் அவற்றை தமது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த போது , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்தவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. முரண்பாடு முற்றிய நிலையில் இரு இளைஞர்கள் மீதும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதி

c 636 பெண்களை இழிவுபடுத்தும் சிங்கள வெறியர்கள் .

ஹிருணிகா: "என் மார்பகங்கள் குறித்து பெருமை அடைகிறேன்" - இலங்கை முன்னாள் எம்.பி ஏன் இப்படி பேசினார்? ரஞ்சன் அருண்பிரசாத் தனது மார்பகங்கள் குறித்து தான் பெருமை அடைவதாக முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஹிருணிகா பிரேமசந்திர, போலீஸாருடன் முரண்பட்டிருந்தார். இதன்போது, ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் செல்ல முடியாதவாறு, போலீஸார் பாதுகாப்பு வேலிகளை அமைத்து, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை ஏற்படுத்தியிருந்தனர். பெண் அரசியல் தலைவர்களால் பெண்கள் முன்னேற்றம் அடைகிறார்களா? ரணிலுக்கு எதிராக திரும்பிய இலங்கை போராட்டம் - காரணம் என்ன? இஸ்லாமிய புரட்சி, பெண்கள், ஆடைகள் - இரான் அன்றும் இன்றும் இந்த நிலையில், ஹிருணிகா பிரேமசந்திர, அந்த தடைகளை மீறி, பிரதமரின் வீட்டிற்குள்

c635 கிளிநொச்சி நடு வீதியில் கதறி அழும் ஆசிரியையின் ஆதங்கம்

கிளிநொச்சி நடு வீதியில் கதறி அழும் ஆசிரியையின் ஆதங்கம் (Video) இலங்கை அரசாங்கம் அசிரியர்களுக்கு எந்த அடிப்படையிலும் முன்னுரிமை வழங்குவதில்லை என கிளிநொச்சியில் நடு வீதியில் அரசு ஆசிரியை ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பில் தெரியவருவது, இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆசிரியை ஒருவர் கடந்த மூன்று நாட்களாக பெற்றோலுகாக எரிபொருள் நிலையத்திற்கு வந்துபோவதாக பெற்றோல் இல்லாததால் பாடசாலைக்கு செல்ல முடியவில்லை என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். குறித்த ஆசிரியை பேசிய காணொளி இதோ...

c 634 இலங்கையை மீட்க இந்தியா திட்டம்

இலங்கையை மீட்க வரும் தமிழர்! நாளை பிளிற்ஸ்கிறிக் நகர்வு இலங்கையின் பொருளாதார அவசர கால நகர்வுகளுக்கான துரித உதவிகளை வழங்க பிளிற்ஸ்கிறிக் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்தியாவின் பிரதம பொருளாதார ஆலோசகரும், மதுரைத் தமிழருமான வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு மேலதிக பொருளாதார உதவிகளை வழங்கும் நோக்கில் நாட்டின் நிலைகளை மதிப்பிடுவதற்காக இக்குழு வருவதாக கூறப்படுகிறது. இந்தக் குழுவினர் விசேட விமானம் மூலம் இலங்கை வரவுள்ளதுடன், மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதன் விரிவான மற்றும் பல இலங்கை, இந்திய, உலக நடப்புக்களை இன்றைய செய்தி வீச்சில் காண்க,

c 633 ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்:

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 1000 பேர் பலி, 1500 பேர் காயம் 22 ஜூன் 2022 ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீடு. பட மூலாதாரம்,@ALHAM24992157 படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீடு. ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்துள்ளது. பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. பக்திகா மாகாணத்தின் அரசு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் பேசும்போது, 1000 பேர் இறந்ததாகவும், 1500 பேர் காயமடைந்ததாகவும், மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் கூறினார். தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 7,000 பேருக்கும் மேலானவர்கள் அங்கு நிலநடுக்கம் காரணமாக இறந்துள்ளனர் என்று ஐநாவின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலத்தின் தரவுகள் கூ

c 632 இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம்

யாழ். நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றம்! யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய அமர்வின்போது இனப்படுகொலை இடம் பெற்றது தொடர்பாக, கனடிய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரதேச சபையில் வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கனடிய பாராளுமன்றத்தில் இலங்கையில் நடைபெற்றது, இனப்படுகொலை தான். அதற்கு நீதி கிடைக்க வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற நல்லூர் பிரதேச சபையின் அமர்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அ. மதுசூதன் குறித்த தீர்மானத்தை சபையில் கொண்டுவந்து ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது. More News 4U