முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 325 ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க விருப்பம்! ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இவ்வாறு இடைக்கால அரசொன்றை அமைக்க ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார் என கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

c 324 நான் எல்லாத்தையும் காட்டுவேன் என்னை நம்புங்கோ ,

சினிமால் நடிகைகள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகின்றது. யாருடைய படம் கூடுதலாக பணம் சம்பாரிக்கின்றது என்பதே இப்போட்டியாகும். இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..! – கிடுகிடுத்த இண்டர்நெட்..! வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் பால் வண்ண கலரில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்தவர் நடிகை தமன்னா. 2005-ல் வெளியான சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னாவுக்கு கல்லூரி திரைப்படம் மிகப்பெரும் அடையாளத்தை தேடி தந்தது. சிம்பிளாக நடித்து அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமனார். தம்மனவின் சிகப்பழகு அந்த படத்தின் மூலம் பெரிதும் பேசப்பட்டது. அதையடுத்து படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை, வேங்கை உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பையா படத்தில் நடித்தபோது நடிகர் கார்த்தியுடன் காதல் வயப்பட்டார். ஆனால், இருவரின் காதலுக்கு கார்த்திய

c 323 அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம்: மகிந்த ராஜபக்ச

அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம்: மகிந்த ராஜபக்ச பரபரப்பு கருத்து இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தான் பொறுப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலைமைக்குத் தான் காரணம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச அரசு கூண்டோடு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அதனிடையே பிரதமர் மகிந்த ராஜபக்ச உடன் பதவி விலகி சர்வகட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பியின் கோரிக்கையும் ஆளும் கட்சிக்குள் பெரும் புயலாக மாறியுள்ளது. இந்நிலையில், பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பார் என்றும், இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் தனது தலைமையிலேயே மலரும் என்றும் நேற்று திட்டவட்டமாக அறிவித்திருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, இன்று "இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நட

c 322 தமிழ் மக்களுக்கு அடிப்படை மாற்றமே தேவை

தமிழ் மக்களுக்கு அடிப்படை மாற்றமே தேவை; அமெரிக்க தூதுவரிடம் யாழ் சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டு (Photos) தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை கேட்கவில்லை, அடிப்படை மாற்றத்தை தான் கோருகின்றார்கள் என அமெரிக்கத்தூதுவர் ஜூலி சுங்கிடம், யாழ்.சிவில் சமூக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழிற்க்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும், யாழ். மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று மாலை இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளும் அமெரிக்க தூதுவருக்கு எடுத்து சொல்லப்பட்டது. கொழும்பில் பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்ததன் விளைவாக அரசியல் ரீதியான பதற்றத் தன்மையொன்று நிலவுகின்றது. ஆனால் வடக்கு – கிழக்கில் அவ்வாறான பதற்றங்கள் இல்லை. தமிழ் மக்கள் ஏன் பெருமெடுப்பில் சிங்கள மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கெடுப்பது இல்லை என்ற கேள்வியை தூதுவர் கேட்டார். தமிழ் மக்கள்

c321 தவறான முடிவை எடுத்து உயிர்ரை விட்ட பெண்

தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கையின் பிரபல இளம் வீராங்கனை இலங்கையின் இளம் வீராங்கனையான கௌசல்யா மதுசானி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அகில இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைத்தாண்டல் போட்டியில் வெற்றியாளராக தடம் பதித்தவர் இவர் 25 வயதான குறித்த பெண் தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

c 320 சிங்களவர் மத்தியில் வெடித்தது சர்ச்சை ?

எங்களுக்கு மஹிந்த மற்றும் கோட்டா வேண்டும்...போராடும் சிறிய குழு இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான நிலமைக் காரணமாக மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 6.9 மில்லியன் மக்கள் கோட்டபாய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலக வேண்டும் என போராடி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சிறிய குழுவொன்று கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும் தங்களுக்கு வேண்டும் என சுதந்திர சதுக்கத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் அவர்கள் பதவி விலக தேவையில்லை என பதாகைகளில் எழுதி ஏந்தியவாறு நின்றனர்

c319 போராட்டகளமாக மாறிய இலங்கை!!

போராட்டகளமாக மாறிய இலங்கை!! காவல்துறையினருக்கு விசேட உத்தரவு இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால், பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக நோயாளர் காவு வண்டிகள், பாடசாலை வாகனங்கள், அலுவலக போக்குவரத்து சேவைகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு மேலதிகமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை மேற்கொள்ளும் வாகனங்களை எவ்வித இடையூறும் இன்றி பயணிக்க அனுமதிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.