முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b679

தமிழர்களிற்கு பயங்கரவாதச் தடை சட்டத்தை எடுப்பதாகச்சொல்லி உலக நாடுகளை ஏமாத்தி பணம் பறிக்கும் இலங்கை புலம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு, புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ(Gotabaya) தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெரன் அன்ட்ரூஸ் (Karen Andrews) உடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் பயில விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொருத்தமான பாடநெறிகளின் ஆரம்பக் கட்டத்தை இலங்கையில் தொடர்வதற்குத் தேவையான கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற

TAMIL Eelam news b678

அமெரிக்காவுக்கு சீனா தகுந்த பதிலடி -நான்கு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டது தட ை அமெரிக்காவின் இறக்குமதி தடை உத்தரவுக்கு பதிலடியாக, அந்நாட்டை சேர்ந்த 4 அதிகாரிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் உய்கர் மக்களை கட்டாயப் பணி செய்யவைத்து தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய சமீபத்தில் அமெரிக்கா தடை விதித்தது. மேலும், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜாங்க ரீதியில் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசின் சர்வதேச மத விவகாரங்களுக்கான ஆணையத்தின் தலைவர் நதின் மென்சா, துணை தலைவர் நூரி டுர்கெல், உறுப்பினர்கள் அனுரிமா பார்கவா, ஜேம்ஸ் கார் ஆகிய 4 அதிகாரிகள் சீனாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோ லிஜியன் தெரிவித்துள்ளார். சீனாவின் உலக வல்லரசாகும் கனவு- போருக்கான தந்திரோபாய மையமாக பயன்படவுள்ள சிறிலங்கா? சீனாவின் உலக வல்லரசாகும் கனவு- போருக்கான தந்திரோபாய மையமாக பயன்படவுள்ள சிறிலங்கா?

TAMIL Eelam news b677

முல்லைத்தீவில் ஒரு இரவில் இடம்பெற்ற இரு பயங்கர சம்பவங்கள்! முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து இரு கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் பாரிய அச்சத்தில் உள்ளனர். நேற்று இரவு (21-12-2021) திங்கட்கிழமை ஆனந்தபுரம் 06 ஆம் வட்டாரப்பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் ஓட்டினை பிரித்து உள் நுளைந்த கொள்ளையர்கள் மூவர் கத்தியினை காட்டி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி அவர்களின் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளார்கள். இதன்போது பெறுமதியான மூன்று தொலைபேசிகள், நான்கு பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் ஏ.ரி.எம். அட்டைகள், கடவுச்சீட்டு, அடையாள அட்டைகள், வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த மதுபான போத்தல்கள் உள்ளடங்கலான 6இலட்சத்து 92 ஆயிரம் பெறுதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். வீட்டில் இருந்தவர்கள் அண்மையில் தான் வெளிநாடு ஒன்றில் இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வீட்டில் சி.சி.ரிவி கமராக்கள் பொருத்தப்பட்டபோதும் கமாரக்கள் சில அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன், ஒளிப்பதிவு சேமிக்கும் காட்டிஸ்கையும், கருவியினையும் திருடர்கள் திருடிசென்றுள்ளார்கள். இ

TAMIL Eelam news b676

இலங்கையர்களின் பாலியல் நாத்தம் உலகம் எல்லாம் பரவத் தொடங்கியுள்ளது. இலங்கையின் முன்னாள் தமிழ் கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய அணியின் சார்பில் முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அந்தனி அப்பாத்துரை என்ற வீரருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர விமான நிலையத்தின் சுங்கப்பிரிவில் கடமையாற்றி வந்த 73 வயதான அப்பாத்துரை, இளவயது பெண் ஒருவர் மீது பாலியல் துன்பறுத்தல் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இளம் பெண்ணை பலவந்தமாக பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் அப்பாத்துரைக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக சமூக சீர்திருத்த அடிப்டையிலான தண்டனை விதித்துள்ளது. எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அப்பாத்துரை இந்த தண்டனையை அனுபவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TAMIL Eelam news b675

சீனாவின் வடக்கு கண்!! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போட்ட உத்தரவு சீன அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களில் இருந்து முழுமையாக விலக வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக தமிழர் தாயகப் பகுதிகளை பலியிட விடாது, தமிழர் தேசமும், தமிழர் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் இறையாண்மையினை செலுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகளில் சீனா மேற்கொள்ளவிருந்த மின்சக்தி திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியதை வரவேற்றுள்ள உருத்திரகுமாரன், போருக்குப் பின்னராக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயக பகுதிகளில் தொடங்கப்படும் திட்டங்கள் எதுவானாலும் மக்களின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''போருக்கு பின்னராக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயக பகுதிகளில் தொடங்கப்படும் திட்டங்கள

TAMIL Eelam news b674

யாழில் ஆகாயத்தில் பறந்த இளைஞன் உயிர்தப்பிய அதிசயம்! பெரும் பரபரப்பு யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்றிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்.பருத்தித்துறை புலோலி பகுதி வடமராட்சியில் இன்று (20-12-2021) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, இளைஞர்கள் பலர் பட்டம் விட்டுகொண்டிருந்த போது பட்டத்தின் கயிற்றை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, பட்டம் ஏற்றியுள்ளனர். இந்நிலையில், பட்டம் ஏற்றிய இளைஞர்களால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் கைவிட்டுள்ளனர். இளம் குடும்பஸ்தர் ஒருவர் மட்டும் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்துள்ளார். மேலும், 40 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் பட்டம் கட்டப்பட்ட கயிற்றை நோக்கி பின் நகர்ந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து தோட்டச் செய்கைக்காக பண்படுத்தப்பட்ட நிலத்தில் வீழ்ந்துள்ளார். இதனையடுத்து குறித்த குடும்பஸ்தர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு

TAMIL Eelam news b673

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தாயாரின் மரணத்தில் எழுந்த பாரிய சந்தேகம்! கிளிநொச்சியில் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு (18-12-2021) இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் 32 வயதுடைய நிலகரட்ண ஜெயசீலி என்ற 03 பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான இவர் முன்பள்ளி ஆசிரியையாக சேவை புரிந்து வந்துள்ளார். கிளிநொச்சி விநாயகபுரம், இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர் தொழிலின் நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மூத்த ப