முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 871

 உரப்பைக்குள் மயக்க நிலையிலிருந்த இளைஞன் மீட்பு உரப்பையில் மயக்க நிலையில் காணப்பட்ட இளைஞன் ஒருவர் காலை மீட்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தம்புள்ளை நகரிலுள்ள கடை ஒன்றின் முன்பாக உரப்பையில் ஒருவர் கிடப்பதை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதையடுத்து பிரதேச வாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்தனர். மாவத்தகமவைச் சேர்ந்த காமினி திசாநாயக்க என்பரே குறித்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

TAMIL Eelam news 870

 சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தால் சிறுபான்மை சமூகத்திற்கே அதிக பாதிப்பு - ஆரிப் சம்சுதீன் எச்சரிக்கை நாட்டில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்குமாயின் சிறுபான்மை சமூகத்திற்கு உள்ள வர்த்தக நலன்கள் இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளதென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ஆரிப் சம்சுதீன் மேலும் கூறியுள்ளதாவது, “எமது சமூகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. போட் சிட்டி சட்டமூலத்தின் ஊடாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும் அபாயம் இருக்கின்றது. சிலவேளைகளில் சிறுபான்மை சமூகத்தின் வர்த்தக நலன்கள், இல்லாமல் போகலாம். போட் சிட்டியானது ஒரு தனி நாடு போன்று இயங்கும் நிலைமையே காணப்படுகின்றது. அங்கு செல்வதற்கு போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் அனுமதி பெற்றே உள் நுழைய முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAMIL Eelam news 869

 முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு! ஐ.நாவிடம் தமிழ் கட்சிகள் முக்கிய கோரிக்கை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மே 12 ம் திகதி விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட நிலையில், இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் கடிதம் தயாரிக்கப் பட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பம் பெறுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர். இக்கடிதம் ஐ.நாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹாநா சிங்கர் மூலமாக ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு ஆவணப்படுத்தக் கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, " 2009 மே 18ல் முடிவடைந்த கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள

TAMIL Eelam news 868

 கொரோனா மேலும் 44 பேர் பலி!   இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, இலங்கையில் 1,132 பேர் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 158,322 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 125,360 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை

TAMIL Eelam news 867

 சீனாவுக்கு எதிராக இலங்கை ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டிய காலம் வரும்! பகிரங்க எச்சரிக்கை  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா படை ஆயுதப் போரில் ஈடுபட்டதுபோல வெகுவிரைவில் போர்ட் சிட்டி நிலத்தை மீட்பதற்காக சீனாவுக்கு எதிராக ஸ்ரீலங்கா போர் தொடுக்கும் நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும், சிவில் அமைப்பைச் சேர்ந்தவருமான சமீர பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலை நினைவுகூரும் வகையில் கொழும்பு மருதானையிலுள் சி.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட செயலமர்வில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், சர்வதேசத்தை நாம் எதிர்த்துக் கொள்ளக்கூடாது. கடந்த காலங்களாக சிவில் அமைப்புக்களை டொலர்களுக்கு அடிபணிகின்றவர்கள் என்றும், அரச சார்பற்ற நிறுவனங்களின் சர்வதேச சூழ்ச்சிகள் என்றும் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகைக்கூட தெரிவித்திருந்தார். ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது? ஈஸ்டர் தாக்குதல் குறித்து உள்நாட்டு விசாரணையில் திருப்தி இல்லாவிடத்து சர்வதேசத்தை நாடப்போவதாக அவரே அறிவித்த

TAMIL Eelam news 866

 போர்குற்ற விசாரணை! - அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் இலங்கையில் இடம்பெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறலுக்காக சர்வதேச பொறிமுறை நிறுவப்பட வேண்டும். அத்துடன், இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீா்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 வது ஆண்டு நிறைவை ஒட்டி அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டெபோரா ரோஸ் இந்தத் தீர்மானத்தை சபையில் முன்வைத்தார். இலங்கை இராணுவம் முள்ளிவாய்க்காலில் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இவ்வாறான படுகொலைகள் இடம்பெற்று ஒரு தசாப்தம் கடந்துவிட்டபோதும் குற்றவாளிகளைப் பொறுப்புக் கூறச் செய்ய இலங்கை அரசு தவறிவிட்டது. அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளையும் இலங்கை நிறைவேற்றவில்லை. போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பரிகாரம் செய்யவோ, அவை குறித்து விசாரிக்கவோ, வழக்குத் தொடரவோ தவறி வருவதன் மூலம் இலங்கையில் தண்டனை விலக்குக் கல

TAMIL Eelam news 865

 சிட்னியின் வடக்கு கரையோரப்பகுதியில் வாழ்ந்த நபர் ஒருவர் தனது வீட்டினுள் நுழையமுயன்ற ஒருவரைக் கொலைசெய்துவிட்டு சடலத்துடன் 15 ஆண்டுகள் வாழ்ந்துவந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Shane Snellman என்ற 39 வயது நபர் 2002 ம் ஆண்டு Bruce Roberts என்ற 46 வயது நபரின் வீட்டிற்குள் திருடுவதற்காக நுழைந்தபோது  அவர் Shane Snellman-ஐ துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளதாக மரணவிசாரணை அதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். Shane Snellman-இன் சடலத்தை தனது வீட்டிலேயே 15 ஆண்டுகள் Bruce Roberts மறைத்துவைத்திருக்கிறார். Bruce Roberts 2017ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக தனது வீட்டிலேயே மரணமடைந்துவிட்டார். பின்னர் Shane Snellman-இன் சடலத்தை வெளியே எங்கும் கொண்டு செல்லாது தனது வீட்டிலேயே 15 ஆண்டுகள் Bruce Roberts மறைத்துவைத்திருக்கிறார். சடலத்திலிருந்து வரும் துர்நாற்றத்தை மறைப்பதற்கு பலவித வாசனைத்திரவியங்களை பயன்படுத்தியிருக்கிறார். இப்படியாக சுமார் 15 ஆண்டுகள் Shane Snellman-இன் சடலத்துடன் வாழ்ந்துவந்த Bruce Roberts 2017ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக தனது வீட்டிலேயே மரணமடைந்துவிட்டார். இவரது வீட்டின் முன்புறம் பெருந்தொ